கணவன், மனைவி ஒற்றுமையாக வாழவும், ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல பிரிஞ்சிட்டாங்கன்னா கூட அவங்க படிக்க வேண்டிய அற்புதமான பதிகம் ஒண்ணு இருக்கு. வாங்க பார்க்கலாம்.
மனித வாழ்க்கையில் 2 உள்ளது. ஒன்று இல்லற வாழ்க்கை. இன்னொன்று துறவற வாழ்க்கை. இதுல எது உயர்ந்ததுன்னா இல்லறத்தோடு கூடிய துறவற வாழ்க்கை.
இல்லற வாழக்கைன்னா கணவன், மனைவி ஒற்றுமையுடன் வாழ்வதுதான். ஆனால் சமீப காலங்களில் சின்ன விஷயத்தையும் பெரிதாக்கி பிரியற சூழல் அரங்கேறி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் அன்பால ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது அவசியம்.
ஆனால் கணவனை மனைவி அடக்கணும்னு நினைப்பதும், மனைவியை கணவன் அடக்கணும்னு நினைப்பதும் பரவலாகி வருகிறது. இது தவறு. அன்பால் அடக்குவதே சிறந்தது. அன்பை விட சிறந்த விலங்கு எதுவும் இல்லை. கணவன் மனைவிக்குள்ள எப்பவும் சண்டை. நிறைய பேர் சொல்ற விஷயம் எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை. பிறரால் தான் வருகிறது என்பார்கள்.
குலதெய்வத்தை வழிபடுங்க. சுவாமியும், அம்பாளும் ஒன்றிணைந்து காணப்படும் அற்புதமான திருத்தலம் திருச்செங்கோடு. அங்குள்ள அர்த்தநாரீஸ்வரரை வழிபாடு செய்யுங்க. கணவன், மனைவி கோர்ட் கேஸ் வரை போயாச்சு. பிரியப் போறாங்க. அவங்க ஒன்று சேரவும் இந்தப் பதிகத்தைப் படிக்கலாம்.
‘காவி உடுத்தும் தாழ்சடை’ என்று தொடங்கும் திருப்புகழ் பாடலும், ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்ற ஞானசம்பந்தர் அருளிய சிவன்பாடலையும் படிக்க வேண்டும். இது பிரியப் போகும், பிரிந்த கணவன், மனைவியை ஒன்று சேர்க்கும் சிறந்த பதிகங்கள். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



