தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத அதிரடி திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு சுமார் 20 நாட்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று, பல முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்த முக்கியத் திட்டங்களை அங்கேயே வகுத்ததாகத் தெரிகிறது. அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு துபாய் வழியாக பெங்களூரு வந்தடைந்த அண்ணாமலை, அங்கு பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் அவர்களை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் போதுதான் தமிழக அரசியலையே உலுக்கக்கூடிய அந்த அதிரடித் திட்டம் முதன்முதலாக விவாதிக்கப்பட்டுள்ளது.
பி.எல். சந்தோஷ் உடனான சந்திப்பின் போது அண்ணாமலை, தனக்குள்ளே இருக்கும் ஒரு ரகசியத் திட்டத்தைப் பொறுமையாகக் கேட்கும்படி கூறியுள்ளார். “நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன், தமிழகத்தில் ஒரு புதிய தனி இயக்கத்தைத் தொடங்கப் போகிறேன்; தயவுசெய்து என்னை மீண்டும் பாஜகவிலேயே நீடிக்கும்படி யாரும் வற்புறுத்த வேண்டாம்” என்று மிகவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பி.எல். சந்தோஷ், “அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம், உங்களுக்கு மீண்டும் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியை நான் வாங்கித் தருகிறேன்; தற்போது இருக்கும் நயினார் நாகேந்திரனை மாற்றிவிட்டு நீங்களே தலைவராக இருங்கள்” என்று கூறி அண்ணாமலையைச் சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.
ஆனால், அண்ணாமலை தனக்கு மீண்டும் மாநிலத் தலைவராகும் எண்ணம் துளியும் இல்லை என்பதைத் தீர்க்கமாகக் கூறி மறுத்துவிட்டார். விடாத பி.எல். சந்தோஷ், “சரி, உங்களுக்கு மத்திய அரசில் கேபினெட் அந்தஸ்துடன் கூடிய அமைச்சர் பதவியை வாங்கித் தருகிறேன், டெல்லிக்கு வாருங்கள்” என்று அடுத்தகட்ட தூண்டிலைப் போட்டுள்ளார். அதற்கும் அண்ணாமலை, “எனக்குக் கேபினெட் அமைச்சர் பதவியும் வேண்டாம், மாநிலத் தலைவர் பதவியும் வேண்டாம், என்னை விட்டுவிடுங்கள்” என்று மறுத்துள்ளார். இவ்வளவு பெரிய பதவிகளைச் சாதாரணமாக மறுக்கும் அண்ணாமலையைப் பார்த்து வியந்த பி.எல். சந்தோஷ், இவ்வளவு பொறுமையாகப் பேசும் நீங்கள் ஏன் இந்த விஷயத்தில் மட்டும் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள் என்று காரணத்தைக் கேட்டுள்ளார்.
அதற்கு அண்ணாமலை, “இன்று என்னை மாநிலத் தலைவராகவும், கேபினெட் அமைச்சராகவும் ஆக்குவீர்கள்; ஆனால், இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்து ஒருவேளை திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, ஐஜேகே போன்ற கட்சிகள் விலகி, பாஜகவும் திமுகவும் கூட்டணி வைக்கும் சூழல் உருவானால் என்ன நடக்கும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். “நான்தான் கடந்த காலங்களில் ஆளுநர் மாளிகைக்கு ட்ரங்க் பெட்டி ட்ரங்க் பெட்டியாகச் சென்று திமுகவிற்கு எதிராகப் பல்வேறு ஊழல் புகார்களைக் கொடுத்தேன். அப்படிப்பட்ட சூழலில், திமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக, நான் கொடுத்த புகார்ப் பெட்டிகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு என்னை வீட்டிற்குப் போகச் சொல்வீர்கள், அதை நானும் கேட்க வேண்டிய நிலை வரும்; இதுதான் ஏற்கனவே அதிமுக விவகாரத்திலும் நடந்தது” என்று தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே இல்லாமல் பாஜகவைத் தமிழகத்தில் வேறொரு புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லப் போவதாகக் கூறியபோது டெல்லி தலைமை அதற்குச் சம்மதித்ததாகவும், அந்த அனுமதியோடுதான் அதிமுகவை அடித்து வெளியில் தள்ளியதாகவும் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் டெல்லி தலைமை மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால், தனக்குக் கட்சியில் எந்தவொரு முக்கியத்துவமும் இல்லாமல் போனதாக அவர் வருத்தப்பட்டுள்ளார். அந்தத் தேர்தலில் தனக்குப் பிரச்சாரம் செய்யவே தயக்கமாக இருந்ததாகவும், தன்னை யாரும் அழைக்காததால் அழையா விருந்தாளியாகப் பல மேடைகளுக்குச் சென்று அவமானங்களைச் சந்திக்க நேரிட்டதாகவும், இனி உங்களது கூட்டணி அரசியலில் நான் இருக்கப் போவதில்லை என்றும், தனது பாதை ‘தனி இயக்கம்’ என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பெங்களூரில் பி.எல். சந்தோஷிடம் பேசிய அதே நிலைப்பாட்டைத்தான் அண்ணாமலை டெல்லியிலும் தொடர்ந்து வருகிறார். கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் நிதின் நபீனிடம் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த பிறகு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். டெல்லி தலைமை அவரைப் பிரதமரைச் சந்தித்துப் பேசிவிட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ள போதிலும், பி.எல். சந்தோஷிடம் சொன்ன அதே வார்த்தைகளில் அண்ணாமலை இப்போதும் உறுதியாக இருக்கிறார். எந்தவொரு பதவியைக் காட்டியும் இந்த முறை தன்னைக் சமாதானப்படுத்த முடியாது என்றும், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்துத் தனது இறுதி விருப்பத்தைத் தெரிவித்துவிட்டுத் தனது புதிய தனி அரசியல் பயணத்தைத் தொடங்கிவிட்டார்.. இனிமேல் தான் தமிழக அரசியல் ஒரு உண்மையான எழுச்சியான தலைவரை பார்க்க போகுது..
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
