தமிழ்சினிமா உலகின் மார்க்கண்டேயன்… இவரு சாதனைக்கிட்ட நெருங்க முடியுமா இன்றைய ஹீரோக்கள்!

இன்றைக்கு தமிழ்சினிமா உலகிலே நடிகர்களின் சம்பளம் என்பது 250 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது என்பதுதான் உண்மை. 3ம் வரிசையில் இருக்கக்கூடிய கதாநாயக நடிகர்கள் கூட குறைந்தது 10ல் இருந்து 15 கோடி ரூபாய்…

இன்றைக்கு தமிழ்சினிமா உலகிலே நடிகர்களின் சம்பளம் என்பது 250 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது என்பதுதான் உண்மை. 3ம் வரிசையில் இருக்கக்கூடிய கதாநாயக நடிகர்கள் கூட குறைந்தது 10ல் இருந்து 15 கோடி ரூபாய் சம்பளத்தை இப்போ வாங்கிக்கிட்டு இருக்காங்க. தமிழ்சினிமா உலகின் நிரந்தர மார்க்கண்டேயன் என்று செல்லமாக அழைக்கப்படுகிற சிவக்குமாரின் மகனான சூர்யாவின் சம்பளம் கூட 50 கோடி ரூபாயைத் தொட்டு இருக்கிறது.

ஆனால், அவரது தந்தையான சிவக்குமாரின் சம்பளம் அவரது 100வது படம் வரையில் 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டவே இல்லை என்பதுதான் உண்மை. அவரது 150வது படத்தில்தான் முதன் முறையாக 1 லட்சம் ரூபாய் சம்பளத்தைப் பெற்றார் சிவக்குமார். இன்றைக்குள்ள கதாநாயக நடிகர்களது சம்பளத்தோடு, அன்றைக்கு இருந்த கதாநாயகர்கள் சம்பளத்தை ஒப்பிட முடியாது.

ஆனால் அந்தக் காலத்தில கதாநாயகர்களாக நடித்த நடிகர்களோட படம் எண்ணிக்கை இருக்கே அந்த எண்ணிக்கையை இந்தக் காலத்துல உள்ள நடிகர்கள் எந்தக் காலத்திலும் தொட முடியாது என்பது இன்னொரு உண்மை. தனது 24வது வயதிலே தமிழ்சினிமா உலகிலே அடிஎடுத்து வைத்த சிவக்குமார் அவரது திரைப்பயணத்தில் 40 ஆண்டுகளைக் கடந்த பின்னால் 192 படங்களில் நடித்து முடித்துள்ளார்.

அந்தச் சாதனையை இன்றைக்குள்ள கதாநாயகர்கள் யாராவது தொட முடியுமா என்று கேள்வி எழுப்புகிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். நியாயமான கேள்விதானே..!