பிரபல படத்தயாரிப்பாளரும், ஸ்டூடியோ அதிபருமான எஸ்எஸ்.வாசன் தமிழ்சினிமாவில் எப்படிப்பட்ட சாதனைகளைச் செய்தவர் என்பது எல்லாரும் அறிந்த விஷயம். அப்படிப்பட்ட சாதனைகளைச் செய்வதற்கு காரணமாக இருந்தவர் தமிழ்சினிமா உலகின் பீஷ்மர் என்று எல்லாரும் சொல்லக்கூடிய இயக்குனர் கே.எஸ்.சுப்பிரமணியம். அவர் நடத்திக் கொண்டு இருந்த மூவிலேண்ட் என்ற ஸ்டூடியோவைத்தான் வாங்கி ஒரு கட்டத்தில் ஜெமினி என்று பெயரிட்டார். எஸ்எஸ்.வாசனைப் பொருத்தவரை அவர் கூடவே பயணம் செய்த இன்னொருவர் யாருன்னா அது கொத்தமங்கலம் சுப்பு. ஜெமினி ஸ்டூடியோ தயாரித்த பல படங்களில் இயக்குனராகவும், கதாசிரியராகவும், கதை வசன கர்த்தாவாகவும் கொத்தமங்கலம் சுப்புவின் பங்களிப்பு இருந்தது. அவர் ஜெமினி ஸ்டூடியோவில் சேர்வதற்குக் காரணமாக இருந்தவரும் இயக்குனர் கே.சுப்பிரமணியம்தான்.
ஜெமினியில் சேர்வதற்கு முன்னால் கே.சுப்பிரமணியத்திடம் தான் பணியாற்றிக் கொண்டு இருந்தார் கொத்தமங்கலம் சுப்பு, ஜெமினி ஸ்டூடியோவை நான் வித்துட்டேன். எஸ்.எஸ்.வாசன்தான் வாங்கிருக்காரு. அவருக்கு என் மேல நல்ல அபிப்ராயம். நீ அவரைப் போய் பார்த்தேனா நிச்சயமாக உன்னை அவரோட ஸ்டூடியோவில சேர்த்துக்குவாரு. உடனடியாகப் போய் அவரைப் பாருன்னு சொல்லி கொத்தமங்கலம் சுப்புவை எஸ்எஸ்.வாசனைப் போய் பார்க்க வைத்தவர் கே.சுப்பிரமணியம். 1941ல் ஜெமினியில் இணைந்தார் கொத்தமங்கலம் சுப்பு. 1969ம் ஆண்டுகள் வரை ஏறக்குறைய 28 ஆண்டுகள் ஜெமினி ஸ்டூடியோவில் தொடர்ந்து பணிபுரிந்து அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான படங்களுக்கு உறுதுணையாக இருந்தார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


