சரக்கு, சிகரெட்டுடன் கெத்தா நின்ற ரஜினி பட போஸ்டர்… பார்த்த உடனே எம்ஜிஆர் ரியாக்ஷன் இதுதான்..!

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும், புரட்சித்தலைவர் ரஜினிக்கும் பெரிய அளவில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாது. ஆனால், கமல், எம்ஜிஆர் கெமிஸ்ட்ரி அப்படி அல்ல. சூப்பரா ஒர்க் அவுட் ஆகும். அது சரி. ரஜினியை பிடி பிடின்னு…

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும், புரட்சித்தலைவர் ரஜினிக்கும் பெரிய அளவில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாது. ஆனால், கமல், எம்ஜிஆர் கெமிஸ்ட்ரி அப்படி அல்ல. சூப்பரா ஒர்க் அவுட் ஆகும். அது சரி. ரஜினியை பிடி பிடின்னு பிடிச்சிட்டாராமே எம்ஜிஆர்? அது எப்போன்னு பார்க்கலாமா…

சில பேரு கணிச்சிருவாங்க. நமக்கு இணையா ஒருத்தன் வளருறான்னா பூம்னு ஒரு வளர்ச்சி நம்மகிட்ட இருக்கும்கறதைக் கண்டுபிடிச்சிற முடியும்.

அதை தான் எம்ஜிஆர் பார்த்துட்டாரு. அவரு அபிராமி தியேட்டர்ல அன்னை அபிராமின்னு ஒரு ஸ்க்ரீன் ஓப்பன் பண்றாங்க. அதைத் திறந்து வைக்கிறதுக்காக வந்துக்கிட்டு இருக்காரு. வண்டி கிண்டி எல்லாம் தாண்டி சைதாப்பேட்டை, பாலம் தாண்டுனதும் பார்த்தா ரெண்டு பக்கமும் தட்டி கட்டி ரங்கா படத்தோட போஸ்டர்.

ஒரு கையில சிகரெட், ஒரு கையில சரக்கு பாட்டில். ரெண்டு பக்கமும் சைதாப்பேட்டையில ஆரம்பிச்சி அண்ணா சாலை வரைக்கும் வழிநெடுகிலும் போஸ்டர். எம்ஜிஆர் அங்கேயே டென்ஷன் ஆகுறாரு. மைக்கைப் புடிச்சி பிடி பிடின்னு பிடிக்கிறாரு. ”இன்றைய இளைஞர்கள் வந்து கெட்டுப்போயிட்டாங்க. அதுவாச்சு. இதுவாச்சு.

தண்ணி, சரக்குன்னு… எங்கே பார்த்தாலும் ஓடுது. இது நல்லதுக்கு அல்ல. இதை சினிமாக்காரங்க பாரபட்சமா பார்க்குறாங்க. அவங்களுக்கும் முழு பொறுப்பு இருக்குது. நான் அப்படி எல்லாம் நடிக்கல. இவரு வந்து அது மாதிரியான படங்கள்ல எல்லாம் நடிச்சிக்கிட்டு இருக்காரு”ன்னு சொன்னதுதான் தாமதம். அன்றைய பத்திரிகைகளில் போஸ்டர் செய்தி, தலைப்பு செய்தி எல்லாம் இதுதான். என்கிறார் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு.