நாளை (20.04.2026)அட்சய திருதியை. அட்சய திருதியைன்னாலே நாம தங்கம், வெள்ளின்னு எதை வாங்கினாலும் அந்தப் பொருள் சேரும்னு நினைச்சிக்கிட்டு இருக்கோம். ஆனால் இன்னைக்கு தங்கம், வெள்ளி, பட்டுன்னு மக்கள் இவற்றை வாங்குவதற்கான நல்ல நேரத்தைத் தேட ஆரம்பிச்சிட்டாங்க.
இப்படி வாங்கினா தான் பொருள் சேரும். இப்படி வாங்கினா தான் மகாலட்சுமி தங்குவாள்னு ஒரு எண்ணம் எல்லாருடைய மத்தியிலும் இருக்கு. உழைக்காம, கஷ்டப்படாம, நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தாம சம்பாதிக்கணும் அப்படி நினைக்கிற ஒரு ரூபாய் கூட தங்கவே தங்காது. உழைத்து கஷ்டப்பட்டு உண்மையான மகாலட்சுமியோட அருளைப் பெறுவது எப்படின்னு பாருங்க.
அட்சய திருதியைன்னாலே பொதுவாக நமக்கு வாங்கணும் வாங்கணும்னுதான் ஞாபகம் இருக்கு. ஆனால் இது ஒரு தானம் செய்ய வேண்டிய நாள். தானம், தவம் செய்தவர்களுக்குப் பலன் கிடைத்த நாள். ரொம்ப ஒரு விஷயத்துக்கு முயற்சி செய்தாலே பகீரதப் பிரயத்தனம்னு சொல்வாங்க. அப்படி பகீரதன் பல நூற்றாண்டுகள் தவம் செய்து கங்கையை பூமிக்கு வரவைத்த நாள்.
அவருடைய தவத்தின் பலனால் கங்கை வந்தாள். குசேலர் செல்வம் எல்லாம் தனக்கு வேண்டாம். கண்ணன் வந்தாலே போதும்னு நினைத்தார். ஆனால் இறைவன் அவருடைய வறுமையைப் போக்கி அஷ்டலட்சுமியைக் கொடுத்த நாள். ஆதிசங்கரர் ‘பவதி பிச்சாந்தேஹி…’ன்னு கேட்டபோது தாங்கள் விரதம் விடுவதற்காக வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை அவருக்குத் தானமாக தந்த அந்த வீட்டுல அவர் தங்க நெல்லிக்கனி மழையைப் பெய்ய ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ பாடிய நாள்.
சிவபெருமான் அன்னபூரணியிடம் இருந்து பிச்சைப் பாத்திரத்தில் பிச்சை கேட்ட நாள். அந்த வகையில் அன்னபூரணி இறைவனுக்குப் பிச்சை அளித்த நாள். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



