என்னங்கடா இது.. ஒரு நாட்டுக்கு எதிராக போராடும் இயக்கம் தரைப்படை, விமானப்படை, கப்பல் படை எல்லாம் வச்சிருக்குது.. பாகிஸ்தானுக்கு சங்கு தான்.. அடுத்த லெவலுக்க்கு சென்ற பலுசிஸ்தான் விடுதலை இராணுவம்.. முதல் ஆப்பு பாகிஸ்தானுக்கு.. ரெண்டாவது ஆப்பு சீனாவுக்கு?

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வரும் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் , தற்போது தனது இராணுவ கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. நிலப்பரப்பில் கொரில்லா தாக்குதல்களை நடத்தி வந்த இவர்கள், அண்மையில்…

balosistn

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வரும் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் , தற்போது தனது இராணுவ கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. நிலப்பரப்பில் கொரில்லா தாக்குதல்களை நடத்தி வந்த இவர்கள், அண்மையில் ட்ரோன் மூலமான வான்வழி தாக்குதல் பிரிவை தொடங்கினர். அதனை தொடர்ந்து, இப்போது ‘ஹமால் கடற்படை தற்காப்புப் படை’ என்ற பெயரில் ஒரு புதிய கடற்படை பிரிவை அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளனர்.

ஜிவானி பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான் கடலோர காவல் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது வெறும் ஒரு தாக்குதல் மட்டுமல்ல, பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் இப்போது நிலம், நீர், ஆகாயம் என அனைத்து தளங்களிலும் பாகிஸ்தான் இராணுவத்தை எதிர்கொள்ள தயாராகிவிட்டனர் என்பதையே இது காட்டுகிறது.

இந்தக் கடற்படை பிரிவு ‘ஹமால் ஜி பலோச்’ என்ற வரலாற்று சிறப்புமிக்க பலுசிஸ்தான் போர் வீரரின் பெயரால் அழைக்கப்படுகிறது. பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்களின் இந்த நடவடிக்கை ‘மல்டி-டொமைன் இன்சர்ஜென்சி’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது, பாகிஸ்தானின் பொருளாதார நலன்களை குறிவைத்து, கடலோர பகுதிகளில் ஒரு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதே இவர்களின் முக்கிய நோக்கமாகும்.

இவர்களிடம் விமானம் தாங்கி கப்பல்களோ அல்லது நீர்மூழ்கிக் கப்பல்களோ கிடையாது; மாறாக, மிகச்சிறிய ஆனால் அதிவேகமான படகுகளை கொண்டே இவர்கள் தாக்குதல்களைத் திட்டமிடுகின்றனர். பலுசிஸ்தான் கடலோர பகுதிகளில் வாழும் மீனவ சமூகத்தினரிடமிருந்து வீரர்களை திரட்டுவது இவர்களுக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.

இந்த கடற்படையின் மிக முக்கியமான இலக்கு சீனாவின் உதவியுடன் கட்டப்பட்டுள்ள ‘குவாடர்’ துறைமுகமாகும். சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் இதயமாக கருதப்படும் குவாடர் பகுதியில் இத்தகைய தாக்குதல்கள் நடப்பது சீனாவிற்கு மிகப்பெரிய எச்சரிக்கையாகும்.

பாகிஸ்தான் இராணுவம் தற்போது பலுசிஸ்தான் பகுதிகளில் தனது ரோந்து பணிகளை அதிகரிக்கவும், கடலோர ராடார் அமைப்புகளை வலுப்படுத்தவும் முயன்று வருகிறது. இருப்பினும், பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்களின் இந்த திடீர் கடற்படை விரிவாக்கம் பாகிஸ்தானுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் 30 முதல் 45 நாட்களுக்குள் பலுசிஸ்தான் கடலோரப் பகுதிகளில் இன்னும் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக அரசியல் மற்றும் இராணுவ நோக்கர்கள் கருதுகின்றனர். மொத்தத்தில், பலுசிஸ்தான் போராட்டக்களம் இப்போது ஆழ்கடலிலும் விரிவடைந்துள்ளதால், பாகிஸ்தான் தனது கடலோர பாதுகாப்பை தக்கவைத்து கொள்ளப் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும்.