இயக்குனர் மகேந்திரன் தன்னோட முதல் படமான முள்ளும் மலரும் படத்துல தயாரிப்பாளரின் எதிர்ப்பையும் மீறி ரஜினி தான் ஹீரோவா நடிக்கணும்னு கேட்டுக்கிட்டது ரஜினியோட ஸ்டார் வேல்யுவினாலயா அல்லது ரஜினியுடைய நடிப்புத் திறமைப் பற்றித் தெரிந்ததாலா என ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு தனது யூடியூப் சேனலில் பதில் அளித்துள்ளார் சித்ரா லட்சுமணன். அதன் விவரம் வருமாறு…
முள்ளும் மலரும் படத்தில் ரஜினிகாந்த் நடித்தால் தான் நல்லாருக்கும்னு இயக்குனர் மகேந்திரன் தயாரிப்பாளர் வேணு செட்டியாரிடம் வற்புறுத்தினார்.
அந்தக் காலகட்டத்துல ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார். ஆனாலும் அவருக்கிட்ட இருக்குற திறமையைப் பார்த்துத் தான் அந்தக் காலகட்டத்தில் அவர் நடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார் இயக்குனர் மகேந்திரன். 1978ல் இயக்குனர் மகேந்திரன் கைவண்ணத்தில் உருவான படம் முள்ளும் மலரும். இது உமாசந்திரன் எழுதிய நாவல்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ரகங்கள். ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ஷோபா. சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி உள்பட பலரும் நடித்துள்ளனர். ராமன் ஆண்டாலும், செந்தாழம்பூவில், அடி பெண்ணே, நித்தம் நித்தம் நெல்லுச் சோறு ஆகிய மனது மறக்காத பாடல்கள் இந்தப் படத்தில்தான் உள்ளன. பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி வெற்றி நடைபோட்ட படங்களில் இதுவும் ஒன்று. ரஜினியின் நடிப்பாற்றலுக்கு உதாரணமான படம் இது.
இந்தப் படம் வருவதற்கு முன்பு வரை ரஜினிகாந்துக்கு ஸ்டைல் மட்டும் தானே தெரியும். நடிக்கலாம் தெரியுமான்னு நக்கலாகக் கேட்ட ரசிகர்களுக்கு நெத்தியடி நடிப்பைக் கொடுத்த ரஜினி படம்னா இதுதான்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



