பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்தா இந்த பலன் நிச்சயம்..! தயாராக இருங்க.!

2026 பங்குனி உத்திரம் எப்போது எந்த நேரத்தில் வருகிறது? வாங்க பார்க்கலாம். பங்குனி உத்திரம் என்றாலே அவரவர் குலதெய்வத்தை வணங்க எங்கிருந்தாலும் வந்து விடுவர். வருடத்தில் ஒருநாள் மட்டும் தான் இந்த வழிபாடு என்பதால்…

2026 பங்குனி உத்திரம் எப்போது எந்த நேரத்தில் வருகிறது? வாங்க பார்க்கலாம்.

பங்குனி உத்திரம் என்றாலே அவரவர் குலதெய்வத்தை வணங்க எங்கிருந்தாலும் வந்து விடுவர். வருடத்தில் ஒருநாள் மட்டும் தான் இந்த வழிபாடு என்பதால் அவர்கள் எத்தகைய வேலையாக இருந்தாலும் அதை ஓரங்கட்டி விட்டு வந்து விடுவார்கள். இந்த நாளில் வேறென்ன சிறப்புகள் என்று பாருங்க.

ஏப்ரல் 1, 2026 புதன்கிழமை அன்று பங்குனி உத்திரம் வருகிறது. தமிழ் மாதத்தில் பங்குனி 18ம் நாள். மார்ச் 31ம் நாள் மதியம் 3.20மணிக்கு உத்திரம் நட்சத்திரம் தொடங்குகிறது. ஏப்ரல் 1ம் தேதி மாலை 4.17 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் முடிகிறது.

சூரிய உதய நேரப்படி ஏப்ரல் 1 அன்று தான் விரதம் கடைபிடிக்க வேண்டும். பங்குனி உத்திரம் என்றாலே அது தெய்வீக திருமண நாள். சிவன்-பார்வதி மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம், முருகன் – தெய்வானை திருமணம், ராமர்- சீதை திருமணம் நடந்த அற்புத நாள்.

மேலும் இது ஐயப்பன் அவதரித்த நாள். மகாலட்சுமி அமிர்தம் கடைந்தபோது அவதரித்த மகாலட்சுமி ஜெயந்தி நாளாகவும் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் முருகப்பெருமானுக்குப் பால் குடம் எடுத்தும், விரதம் இருந்தும் வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

குலதெய்வத்தின் அருள் இருந்தால் தான் மற்ற தெய்வத்தின் அருள் கிடைக்கும். இந்த உண்மையை அறிந்த நம் முன்னோர்கள் வருடம் முழுக்க வேலை செய்யும் போது குலதெய்வத்தை நம் வம்சாவழியினர் மறந்து விடக்கூடாது என்று பங்குனி உத்திரம் என்ற நன்னாளில் இப்படி ஒரு வழிபாட்டு முறையைக் கடைபிடித்து வந்தனர். அதனை நாமும் தொடர்ந்து இறையருளைப் பெறுவோம்.