ஆண்டுதோறும் நாம் கொண்டாடி வரும் சிறப்பான இந்து பண்டிகைகளில் ஒன்று ராமநவமி. அந்த வகையில் ராமர் யார்? அவரை நாம ஏன் கொண்டாடணும்?
தசரதச் சக்கரவர்த்தியின் மகன் ராமன். அயோத்தியை ஆண்டவன் என்பது நமக்குத் தெரியும். அப்படியிருக்க அவரை நாம் ஏன் கொண்டாடணும்? இந்த ஆண்டு ராமநவமி எப்போது வருகிறது? வாங்க பார்க்கலாம்.
தசாவதாரத்தில் அவர் ஒரு அவதாரம். அவதாரங்களில் உயர்ந்த அவதாரமாகப் பேசக்கூடியவைகளில் ஒன்று இது. இறைவனே நமக்காக பூமிக்கு இறங்கி வந்து ஒரு மானுடனாக எப்படி வாழணும்னு ஒரு வாழ்வியல் முறையைக் கற்றுத் தந்த அவதாரம் தான் இந்த ராமாவதாரம்.
உனக்க ராஜ்ஜியம் இருக்குன்னு சொன்னபோதும் அவர் சந்தோஷப்படல. ராஜ்ஜியம் இல்லன்ன போதும் அவர் வருத்தப்படல. ஒரு சமநிலை மனதோடு எப்படி பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அழகாக அந்த இடத்தில் சொல்லி இருப்பார் ராமர்.
எத்தனையோ இடங்களில் அவரை நினைத்துப் பார்த்து அற்புதம் என சொல்லும் அளவுக்கு அவரது வாழ்வியல் பயணம் இருக்கு. மனைவியை அபகரித்தவனிடம் கூட போர்க்களத்தில் இன்று போய் நாளை வான்னு சொல்கிறார். ஏன்னா அப்போது அவனிடம் ஆயுதம் இல்லை. நிராயுதபாணியிடம் போர் செய்யக்கூடாது என்ற சட்டத்திட்டத்தின்படி நடந்து கொள்கிறார்.
மனதளவில் பக்குவமாக இருப்பது தான் இன்று மனிதன் படிக்க வேண்டிய கட்டாய பாடம். இப்படி எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்த ராமரை நாம் எப்படி கொண்டாடாமல் இருக்க முடியும்? நவமி திதியும் புனர்பூசம் நட்சத்திரமும் சேர்ந்து இருக்குற காலத்துல ராமநவமி கொண்டாடுவது சிறப்பு.
அந்த வகையில் இந்த ஆண்டு 26ம் தேதி பிற்பகல் 2.57மணி முதல் மறுநாள் 12.52 மணி வரை நவமி திதி உள்ளது. புனர்பூசம் நட்சத்திரம் 26ம் தேதி இரவு 7.06 மணி முதல் 27ம் தேதி மாலை 5.48 மணி வரை உள்ளது. அதனால் ராமநவமியை 27.3.2026ம் தேதியில் நாம் சிறப்பாகக் கொண்டாடலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



