தமிழ்த்திரை உலகில் நடிகர் திலகம்னா அது சிவாஜி என்று டக்கென்று நமக்கு நினைவுக்கு வந்து விடும். அவர் ஒரு சினிமா டிக்ஷனரி. அவரது நடிப்பைப் பார்த்து திரையுலகிற்கு வந்தவர்கள் பலர் உண்டு. இப்போது வரை அவரது சாயல் இல்லாமல் எந்த நடிகரும் படங்களில் நடித்து இருக்க முடியாது.
ஏதாவது சிரமமான காட்சியாக இருந்தால் அதற்கு எப்படி டயலாக் பேசுவது? முகபாவனையை வைத்துக் கொள்வது என்று குழப்பம் ஏற்பட்டால் உடனே சிவாஜியின் படங்களைத் தான் பார்ப்பார்கள். எவ்வளவு சிரமமான காட்சியாக இருந்தாலும் சிவாஜி அசால்டாக நடித்து இருப்பார்.
அவரது உடல் பாகங்கள் ஒவ்வொன்றுமே தனித்தனியாக நடிக்கும் ஆற்றல் கொண்டது. அந்த வகையில் அவருடன் இன்று வரை பெரிய லெஜன்ட்களாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கும், உலகநாயகன் கமலுக்கும் நட்புறவு எப்படி இருந்தது என்று ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
படையப்பா படத்தின் கதையை சிவாஜி கேட்டார். அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதனால் அந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டு விட்டார் சிவாஜி. அடுத்து சம்பளம். அதைப் பற்றிப் பேச்சு வந்தபோது அவருடைய நடிப்பைப் பார்த்துத் தான் நான் நடிக்கவே வந்தேன். அதனால சிவாஜி என்ன சம்பளம் கேட்கிறாரோ அதைப் பேரம் பேசாம அப்படியே கொடுத்து விடுங்கள் என்று தன்னோட தயாரிப்பு நிர்வாகியிடம் சொன்னவர்தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
சிவாஜியின் மீது எந்தளவுக்கு அன்பு வைத்திருந்தார் என்பதற்கு இது உதாரணம். கமல்ஹாசனைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சிவாஜியினுடைய கலைவாரிசு என்றுதான் இன்று வரை சினிமா உலகம் கமலைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது. அந்தளவில் தான் அவர்கள் ரெண்டு பேருக்கும் இடையே உறவு இருந்தது என்கிறார் சித்ரா லட்சுமணன்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



