கடவுளிடம் எப்படி வேண்டுவது? பாடம் கற்பிக்கிறாரோ காரைக்கால் அம்மையார்!

இறைவனிடம் எல்லாரும் என்ன வேண்டுவார்கள். நல்ல உடல் ஆரோக்கியம், கல்வி, செல்வம், ஒற்றுமை, சந்தோஷம், மன அமைதின்னு தான் வேண்டுவாங்க. நல்ல உடல் ஆரோக்கியம், கொஞ்சம் சொத்து, பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, வேலை, திருமணம்…

இறைவனிடம் எல்லாரும் என்ன வேண்டுவார்கள். நல்ல உடல் ஆரோக்கியம், கல்வி, செல்வம், ஒற்றுமை, சந்தோஷம், மன அமைதின்னு தான் வேண்டுவாங்க. நல்ல உடல் ஆரோக்கியம், கொஞ்சம் சொத்து, பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, வேலை, திருமணம் என்று இப்படி எதையாவது கேட்கலாம்.

இதை எல்லாம் விட்டு விட்டு காரைக்கால் அம்மையார் என்னென்னமோ வேண்டுறாங்க. இப்படி யாராவது வேண்டி இருக்கீங்களா? வாங்க அப்படி அவங்க என்னதான் வேண்டுறாங்கன்னு பார்க்கலாம்.

இறவாத அன்பு வேண்டுமாம். எல்லா உயிர்களிடத்தும், எல்லா நேரத்திலும் இறவாத அன்பு வேண்டுமாம். உயிர் உள்ளது வளர்ந்து கொண்டே இருக்கும். இறந்தது வளராது. இறவாத அன்பு நாளும் வளரும். அதற்கு அடுத்து பிறவாமை வேண்டுமாம். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தினால் அது நல்ல வினை தானே. அதன் காரணமாக ஒரு வேளை பிறவி வந்து விட்டால் ?

அப்படி பிறந்து விட்டால், இறைவன் திருவடி மறவாமை வேண்டுமாம். திருவடியை மறவாமல் இருந்தால் மட்டும் போதாது, அந்த திருவடியின் கீழ் என்றும் இருக்கும் வரம் வேண்டும் என்று வேண்டினாராம். அவர் அப்படி வேண்டியதாக பெரிய புராணத்தில், பன்னிரண்டாம் திருமுறையில்.சேக்கிழார் பெருமான் சொல்கிறார்,

இறவாத இன்பம் தரும் அன்பு வேண்டினார். சில அன்பு துன்பமும் தரும். வரையறைகளுக்கு உட்பட்ட அன்பு துன்பம் தரும். என் தேசத்தின் மேல் வைத்த அன்பு, அடுத்த நாட்டுக்காரனை கொல்லவும் செய்யும். என் மதத்தின் மேல் வைத்த அன்பு பிற மதத்தவர்களை அழிக்கவும் சொல்லும்.

எல்லை இல்லாத அன்பு , இன்பத்தைத் தரும். அப்படிப்பட்ட இறவாத, நாளும் நாளும் வளரும் இன்ப அன்பை வேண்டினார். மேலும் வேண்டுவார் மீண்டும் இங்கு வந்து பிறவாமை வேண்டும். வினை காரணமாக மீண்டும் பிறக்க நேர்ந்தால், உன்னை என்றும் மறவாமை வேண்டும். இன்னும் வேண்டும். நான் நீ மகிழ்ந்து பாடி ஆடும் போது உன் திருவடியின் கீழ் இருக்க வேண்டும் என்று காரைக்கால் அம்மையார் வேண்டினார்.