கிருஷ்ணபட்ச அமாவாசைக்கு இத்தனை சிறப்பா? மறக்காம இதை மட்டுமாவது செய்யுங்க!

இன்று (18.3.2026) பங்குனி கிருஷ்ண பக்ஷ அமாவாசை. பங்குனி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ அமாவாசை மிகவும் புனிதமான தினமாக கருதப்படுகிறது. இந்த நாள் பித்ரு தர்ப்பணம், பித்ரு பூஜை, மற்றும் தோஷ நிவாரணம்…

இன்று (18.3.2026) பங்குனி கிருஷ்ண பக்ஷ அமாவாசை. பங்குனி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ அமாவாசை மிகவும் புனிதமான தினமாக கருதப்படுகிறது. இந்த நாள் பித்ரு தர்ப்பணம், பித்ரு பூஜை, மற்றும் தோஷ நிவாரணம் செய்ய உகந்த நாள். அமாவாசை நாள் என்பது பித்ருக்கள் (முன்னோர்கள்) பூமிக்கு அருகில் வருகிறார்கள் என்று நம்பப்படுகிறது.

இந்த நாளில் தர்ப்பணம் செய்தால், முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள தடைகள் நீங்கும். பித்ரு தோஷம் குறையும். குறிப்பாக பங்குனி மாத அமாவாசை ஆண்டின் இறுதிக் காலம் என்பதால் பழைய கர்மங்களை கழிக்கும் சக்தி அதிகம்.

அதிகாலையில் எழுந்து குளிக்க வேண்டும். இயன்றால் ஆறு, குளம், கடலில் நீராடுவது சிறப்பு. கருப்பு அல்லது வெள்ளை உடை அணிவது நல்லது. தர்ப்பை, எள், தண்ணீர் கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். பித்ரு தேவர்களுக்கு மனதார நினைத்து மூன்று முறை நீர் அர்ப்பணிக்க வேண்டும்.

தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், ஒரு எளிய முறையாக எள் கலந்து நீரை வீட்டிலேயே ஊற்றி ‘ஓம் நமசிவாய’ என மந்திர ஜபம் செய்து பிரார்த்தனை செய்யலாம். வீட்டில் தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்ற வேண்டும்.

தெற்கு திசை எமதர்மன் மற்றும் பித்ருக்களின் திசை. பித்ருக்களுக்கு பிடித்த பொருட்கள் எள் சாதம், வெண் பொங்கல், வாழைப்பழம், தேங்காய். இதனை வைத்து மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த நாளில் தானம் மிகவும் முக்கியம் அன்னதானம், உடை தானம், எள் தானம், காகங்களுக்கு உணவு இடுதல் சிறப்பு