மாசி மகத்துல இறைவனிடம் நாம் எப்படி வேண்டுவது? பிரபலம் சொல்றதைக் கேளுங்க!

இன்று மாசி மகம். ஓர் உன்னதமான திருநாள். இந்த நாளில் நாம் இறைவனிடம் எப்படி வேண்டுவது? வாங்க பார்க்கலாம். மாசி மகத்திருவிழாவில் முன்னோர் வழிபாடு பிரசித்திப் பெற்றது. அண்ணாமலையாரே இந்த நாளில் தான் நீத்தார்…

இன்று மாசி மகம். ஓர் உன்னதமான திருநாள். இந்த நாளில் நாம் இறைவனிடம் எப்படி வேண்டுவது? வாங்க பார்க்கலாம்.

மாசி மகத்திருவிழாவில் முன்னோர் வழிபாடு பிரசித்திப் பெற்றது. அண்ணாமலையாரே இந்த நாளில் தான் நீத்தார் கடன் செய்தார். அதனால் முன்னோர்களை இந்த நாளில் வழிபட்டு மகிழலாம். குழந்தை வரத்துக்காகக் காத்துக் கொண்டு இருப்பவர்கள் முருகப்பெருமானை நினைத்து இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம்.

சிவ வழிபாட்டில் இந்த நாள் ரொம்பவே விசேஷமானது. காமதகன விழா என பல இடங்களில் நடைபெறும் ஒரு உன்னதமான நாளும் இதுதான். அம்பாள் தாட்சாயிணியாக அவதாரம் செய்த நாள். இதுல பௌர்ணமியும் வருவதால் விசேஷம். நாராயணருக்கு செய்யக்கூடிய சத்யநாராயணர் பூஜை ரொம்பவே விசேஷமானது. நாங்க வீட்டுலேயே தான் குளிப்போம்.

எங்க ஊருல நதி கிடையாதுன்னு சொல்றவங்க ஒரு கலசம் வைத்து அதுல நீர் எடுத்து பூ போட்டு அதை சுவாமி முன்னால் தீர்த்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் நீராடினால் எப்படி உடலில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்குகிறதோ அது மாதிரி எங்க மனசுல உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கி எங்க வாழ்க்கையில ஒரு புத்துணர்வு கிடைக்கணும்னு இறைவன்கிட்ட பிரார்த்தனை பண்ணுங்க.

பூஜை முடிந்ததும் நாம அந்த தீர்த்தத்தைத் தெளிச்சிக்கலாம். நம்ம மனத்தூய்மையைத் தான் இறைவனிடம் வேண்டணும். தாலிக்கயிறு மாத்திக்கிற வழக்கம் சிலருக்கு உண்டு. வழக்கம் இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள். கட்டாயம் கிடையாது. வாய்ப்புள்ளவர்கள் அன்னதானம் செய்து கொள்ளுங்கள். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.