50% வரி போட்டா இந்தியா மிரண்டுடும்னு நினைச்சியா டிரம்ப்? நீ வரியை உயர்த்து… நாங்க எங்க எல்லையை உயர்த்துவோம். வாஷிங்டன் கதவை மூடுனா என்ன, ஐரோப்பா கதவு நமக்காக திறந்தே இருக்கும்! அமெரிக்காவுக்கு ஒரு டிரம்ப்னா… உலகத்துக்கே எங்க மோடி ஒரு Trump Card! நாங்க இல்லாம உன் சந்தையும் ஓடாது, உன் பொருளாதாரமும் தேறாது! நாங்க யாரையும் நம்பி இல்லை, ஆனா உலகம் எங்களை நம்பி இருக்கு!

சர்வதேச அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் மற்றும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து சர்வதேச அரசியல் நிபுணர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில முக்கிய தகவல்களை…

modi trump 1

சர்வதேச அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் மற்றும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து சர்வதேச அரசியல் நிபுணர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில முக்கிய தகவல்களை தற்போது பார்ப்போம்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்கு ஒரு பலமான பதிலடியாக இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் அமைந்துள்ளது. டிரம்ப் நிர்வாகம் இந்தியா மீது வர்த்தக வரிகளை விதிப்பதன் மூலம், இந்தியாவின் விவசாயம் மற்றும் பால் பண்ணை துறைகளில் சலுகைகளை பெறலாம் என்று கணக்கு போட்டது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் இறையாண்மையை மதித்து, அந்த உணர்வுப்பூர்வமான துறைகளை ஒப்பந்தத்தில் இருந்து விலக்கி வைத்துள்ளது. இது டிரம்பின் வியூகத்தை முற்றிலுமாக முறியடித்துள்ளது. அமெரிக்காவின் வர்த்தக மிரட்டல்களுக்கு இந்தியா பணியாது என்பதையும், ஐரோப்பா தனது பாதையை தனித்துவமாக தேர்ந்தெடுக்க தொடங்கிவிட்டது என்பதையும் இந்த ஒப்பந்தம் உலகிற்கு உரக்கச் சொல்கிறது.

அட்லாண்டிக் கடலுக்கு இருபுறமும் உள்ள அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த ஒற்றுமை இப்போது சிதைய தொடங்கியுள்ளது. உக்ரைன் போர் விவகாரம் மற்றும் கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு போன்ற காரணங்களால் ஐரோப்பா கடும் அதிருப்தியில் உள்ளது. பாதுகாப்புக்காக அமெரிக்காவை சார்ந்திருந்த ஐரோப்பா, இப்போது தனது பொருளாதார மற்றும் ராணுவ வலிமையை சுயமாக வளர்த்துக்கொள்ள முற்படுகிறது. டிரம்ப் ஐரோப்பிய நாடுகள் தற்காப்பிற்காக அதிக செலவு செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது, இறுதியில் அமெரிக்க ஆயுதங்களை விற்கவே உதவும் என்ற உள்நோக்கத்தை ஐரோப்பா நன்கு உணர்ந்துள்ளது. இதனால் அமெரிக்காவிடமிருந்து விலகி, இந்தியா போன்ற நாடுகளுடன் நெருக்கம் காட்டுவது ஐரோப்பாவின் புதிய புவிசார் அரசியல் நகர்வாக மாறியுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பா ஒரு இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது. ஒருபுறம் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துக்கொண்டு, மறுபுறம் ரஷ்யா ஒரு ஐரோப்பிய நாடு என்பதை மறுக்க முடியாமல் தவிக்கிறது. ரஷ்ய எரிவாயுவை நிறுத்தியது மிகப்பெரிய தவறு என்ற குரல்கள் ஜெர்மனி போன்ற நாடுகளில் ஒலிக்க தொடங்கியுள்ளன. அதே வேளையில், சீனாவுடனான உறவிலும் ஐரோப்பா குழப்பத்தில் உள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் சீனாவுடன் வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்த முயல்கின்றன. ஆனால், சீனாவின் அசுர வளர்ச்சியை எதிர்கொள்ள ஐரோப்பாவிற்கு இந்தியா ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான வர்த்தக கூட்டாளியாக தெரிகிறது.

அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் இப்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் பிளவுபட்டுள்ளது. குறிப்பாக சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக டிரம்ப் எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகள் அமெரிக்க மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதலை உருவாக்கியுள்ளன. ஐரோப்பிய நாடுகளின் குடியேற்ற கொள்கைகளை டிரம்ப் விமர்சித்து வந்தாலும், இந்தியாவின் தகுதியான பணியாளர்களுக்கு ஐரோப்பா கதவுகளை திறப்பது அமெரிக்காவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் நகர்வு மற்றும் ஐரோப்பாவின் ஒத்துழைப்பு ஆகியவை டிரம்பின் கொள்கைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன. இந்த உள்நாட்டு பூசல்கள் சர்வதேச அளவில் அமெரிக்காவின் பிடியை தளர்த்தியுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக ஈரான் விவகாரத்தில் டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானவை. ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் ஏவுகணை திறன்களை முடக்க அவர் காட்டும் அதீத வேகம், அந்த பிராந்தியத்தில் ஒரு மிகப்பெரிய போருக்கான சூழலை உருவாக்கக்கூடும். ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் போக்குவரத்தை ஈரான் தடுத்தால், அது இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கும். ஒபாமா காலத்தில் போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் வெளியேறியது ஒரு வரலாற்று பிழை என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இப்போது ஈரான் தனது உரிமைகளை விட்டு கொடுக்க தயாராக இல்லை, அதே சமயம் டிரம்பும் தனது பிடிவாதத்தை குறைக்கப் போவதில்லை என்பது உலக பொருளாதாரத்திற்கு ஒரு கவலைக்குரிய செய்தியாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, பிரதமர் மோடியின் தலைமையிலான வெளியுறவுத்துறை மிகவும் முதிர்ச்சியான அணுகுமுறையை கையாண்டுள்ளது. ஒருபுறம் ரஷ்யாவுடன் உறவை தக்கவைத்துக் கொண்டு, மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை செய்துள்ளது இந்தியாவின் ‘யதார்த்த அரசியல்’ வெற்றியாகும். இந்த ஒப்பந்தம் இந்தியாவின் தோல், ஜவுளி மற்றும் நகைத்துறைகளுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும். ஐரோப்பா தனது தற்காப்பு பட்ஜெட்டை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் தனியார் துறைக்கு ஐரோப்பிய நிறுவனங்களுடன் இணைந்து பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் பொற்காலம் இது. அமெரிக்காவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விட ஐரோப்பாவுடன் இணைந்து செயல்படுவது இந்தியாவிற்கு எளிதாக இருக்கும் என்பதால், வரும் ஆண்டுகளில் இந்தியா ஒரு உலகளாவிய உற்பத்தி மையமாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.