தலைப்பைப் பார்த்ததும் நமக்கு தளபதி படத்தின் பாடலாச்சே என்று நினைவு வரும். இது இப்போ பொருத்தமான நேரம் தானே. அந்த வகையில் நாளை தை பிறக்கும் நாள். நன்னாள். இது ஒரு பொன்னாள். தை மாதப் பிறப்பின் முதல் நாள் பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடி வருகிறோம். அதற்கு முந்தைய நாளான இன்று (14.1.2026) போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.
போகி என்பது பழையது எல்லாம் போயிட்டு புதுசு எல்லாம் கிடைக்கணும்னு வேண்டும் நாள். நம்ம வீட்டுல உள்ள பழைய பொருள்களை எல்லாம் எரித்து விட்டு இதை எரிச்சதனால பிரச்சனை எல்லாம் போயிடுச்சுன்னு நினைக்கிறது போகி அல்ல. இதன் உண்மை தத்துவம் என்னன்னு பார்க்கலாம்.
டயரை எரிப்பது, கட்டையை எரிப்பது, துணியை எரிப்பது போகி அல்ல. அது மனதில் உள்ள கோபம், ஆசை, பொறாமை, வஞ்சனை என்ற கெட்ட குணங்களைத் தவிர்ப்பது. ஒரு நல்ல புடவை கட்டுனா அதைப் பார்க்குற பார்வை அப்படி. ஒரு நல்ல புடவை கூட கட்ட முடியலன்னு சொல்வாங்க. நல்லவர்கள் எப்போதும் நல்ல விதமா பேசுவாங்க. நல்ல வண்ணமே யோசிப்பாங்க.
ஆகாதவங்க தான் இந்த ஆகாத சிந்தனை, ஆகாத பேச்சு, பொல்லாத வார்த்தை எல்லாமே வரும். நல்லவங்க இதை யோசிக்கவே மாட்டாங்க. அவங்க பேச்சும் நல்லாவே இருக்கும். வார்த்தையும் நல்லாவே வரும். அதனால தான் அவங்க வாழ்க்கையும் சிறப்பா இருக்கும். நமக்கு என்ன இருக்கோ அதை சந்தோஷமா வச்சிக்கப் பழகிக்கணும். அடுத்தவங்களைப் பார்த்துப் பொறாமைப்படுறதோ, கோபப்படுறதோ, அதுக்கான ஆதங்கப்படுறதோ அதெல்லாம் வேண்டாம். தவிர்த்துடுங்க.
இதெல்லாம் சில நேரங்களில் அப்பப்ப தலைதூக்குற போது இதெல்லாம் தப்பு. இருக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிடணும். இது பெண்களுக்கு மட்டுமல்ல. ஆண்களுக்கும் இந்த கெட்ட குணங்கள் உண்டு. இதெல்லாம் இருந்தால் கூட இந்த நல்ல நாளான போகியில் மனசுல உள்ள குப்பைகளை எல்லாம் எரிச்சிடுங்க. இதெல்லாம் போயிடுச்சுன்னா நாம முகம் மலர்ச்சியா நல்லா இருப்போம்.
அதனால போகி அன்று இந்த விரதத்தை எடுத்துக்கோங்க. வீட்டுல அன்னைக்கு நம்ம வீட்டுத் தெய்வத்தைக் கும்பிடுவது வழக்கம். இந்த நாளில் வீடை எல்லாம் துடைத்து விட்டு நமது குலதெய்வத்தை தை பிறக்கப் போகுது. வீட்டுக்கு வாம்மா. எங்க வீட்டுல எழுந்தருளி எனக்கு அருள்புரிகன்னு வேண்டணும். மாலை 7 மணிக்கு மேல இரவு 9 மணிக்குள் படையல் வைத்து வழிபடலாம்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


