ரூ.3,76,07,36,80,00,000 கோடி வெளிநாட்டு கடன்.. மீள வாய்ப்பே இல்லாத பாகிஸ்தான். கடனுக்கு பதில் அரசு நிறுவனங்களை விற்க உலக வங்கி வலியுறுத்தல்.. 2024 ஜூலை முதல் 2025 ஜூன் வரை மட்டும் 34,239,300,000,000 கோடி நஷ்டம்.. இந்த நஷ்டம் வெறும் நம்பர் இல்ல… பாகிஸ்தான் பொருளாதார முதுகெலும்பு சுக்குநூறா உடைஞ்சு போயிருக்குன்றதோட எச்சரிக்கை மணி.. இந்த லட்சணத்துல தீவிரவாத செலவு வேற..இப்படியே போனா திவால் தான்..

பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை தற்போது ஒரு மிக மோசமான சரிவை சந்தித்து வருகிறது, குறிப்பாக அந்நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் 300 சதவீதத்திற்கும் அதிகமான நஷ்டத்தை பதிவு…

pakistan

பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை தற்போது ஒரு மிக மோசமான சரிவை சந்தித்து வருகிறது, குறிப்பாக அந்நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் 300 சதவீதத்திற்கும் அதிகமான நஷ்டத்தை பதிவு செய்துள்ளன. 2024 ஜூலை முதல் 2025 ஜூன் வரையிலான கால பகுதியில், பாகிஸ்தான் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த நிறுவனங்களின் நிகர நஷ்டம் 122 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் நஷ்டமான 30 பில்லியன் ரூபாயை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எரிசக்தி, போக்குவரத்து மற்றும் நிதித்துறை என பல்வேறு துறைகளில் பரவியுள்ள இந்த அரசு நிறுவனங்கள், பாகிஸ்தானின் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடியோடு சிதைத்து வரும் ஒரு பெரும் சுமையாக மாறியுள்ளன.

இந்த இமாலய நஷ்டத்திற்கு எண்ணெய் விலை வீழ்ச்சி ஒரு முக்கிய காரணம் என்று தற்போதைய நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப் தரப்பில் கூறப்பட்டாலும், பொருளாதார வல்லுநர்கள் இதை ஒரு கட்டமைப்பு தோல்வியாகவே கருதுகின்றனர். பாகிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் இது குறித்து கூறுகையில், அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் அனைத்தும் வெறும் வாய்வார்த்தைகளாகவே முடிந்துவிட்டன என்பதற்கு இந்த 300 சதவீத நஷ்டமே சாட்சி என்று விமர்சித்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மட்டுமே இதற்கு தீர்வாக அமையும் என்றாலும், தற்போதைய அரசுக்கு அதற்கான அரசியல் துணிச்சலோ அல்லது முறையான திட்டமிடலோ இல்லை என்பது அவரது கருத்தாக உள்ளது.

பாகிஸ்தானின் மின் விநியோக நிறுவனங்கள் , பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் , பாகிஸ்தான் ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவை தான் மிக அதிக நஷ்டத்தை ஏற்படுத்தும் நிறுவனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக மின்சாரத்துறை மட்டும் சுமார் 5.9 டிரில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அளவிற்குக் கடனில் மூழ்கியுள்ளது. இதே நேரத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள்மற்றும் நேஷனல் பேங்க் ஆஃப் பாகிஸ்தான் போன்ற சில நிறுவனங்கள் லாபத்தில் இயங்கினாலும், ஒட்டுமொத்த நஷ்டத்தை ஈடுகட்ட அந்த லாபம் போதுமானதாக இல்லை. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை முட்டுக்கொடுத்து தூக்கி நிறுத்த பாகிஸ்தான் அரசு 2.1 டிரில்லியன் ரூபாய் வரிப்பணத்தை மீண்டும் அந்த நிறுவனங்களுக்குள்ளேயே முதலீடு செய்து வருவது பெரும் அவலமாக பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானின் இந்த மோசமான நிதிநிலைக்கு ‘சுழற்சி கடன்’ ஒரு முக்கிய காரணமாக உள்ளது. மின்சார நிறுவனங்கள், எரிபொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையே ஒருவர் மற்றவருக்கு கொடுக்க வேண்டிய கடன் நிலுவைகள் பல டிரில்லியன் ரூபாய்களை எட்டியுள்ளன. அரசு வழங்கும் நேரடி மானியங்கள் குறைந்திருந்தாலும், நிறுவனங்களின் இருப்புநிலையை சரிசெய்ய அரசாங்கம் வழங்கும் மூலதனம் என்பது வரி செலுத்துவோரின் பணத்தை பாழாக்கும் ஒரு செயலாகும் என்று முன்னணி ஊடகங்கள் சாடியுள்ளன. சீர்திருத்தங்கள் செய்யப்படாமல் இந்த நிறுவனங்களுக்கு பணம் ஊற்றுவது என்பது ஓட்டை குடத்தில் தண்ணீர் ஊற்றுவதற்கு சமமானது என விமர்சனங்கள் எழுகின்றன.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற அமைப்புகள் பாகிஸ்தானை இந்த பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்காக ‘கடன்-பங்கு பரிமாற்றம்’ என்ற ஒரு புதிய முறையை வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இதன்படி, வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் பாகிஸ்தானுக்கு வழங்கிய கடனுக்கு பதிலாக, இந்த அரசு நிறுவனங்களின் பங்குகளை பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன் சுமை குறைவதோடு, அந்த நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் மேலாண்மை திறன்களும் மேம்படும். தற்போது பாகிஸ்தானின் மொத்த வெளிநாட்டு கடன் சுமார் 134 பில்லியன் டாலராக அதாவது 3,76,07,36,80,00,000 கோடி பாகிஸ்தான் ரூபாயாக உள்ள நிலையில், இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் மட்டுமே பொருளாதாரத்தை மீட்க உதவும்.

ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் முழு நிதியாண்டிலேயே நஷ்டம் மூன்று மடங்காக உயர்ந்திருப்பது அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. அரசியல் செல்வாக்கிற்காகவும், வேலைவாய்ப்பு வழங்கும் இடமாகவும் இந்த நிறுவனங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டு, கடுமையான பொருளாதார மாற்றங்களை கொண்டு வராவிட்டால் பாகிஸ்தான் மீள முடியாத கடன் சுழலில் சிக்கிக்கொள்ளும். 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருக்கும் இந்த சூழலில், பாகிஸ்தான் தனது பொதுத்துறை நிறுவனங்களை லாபகரமாக மாற்றுவது என்பது இப்போதைக்கு ஒரு எட்டாக்கனியாகவே நீடிக்கிறது.