எவ்வளவு தான் மனக்கட்டுப்பாட்டுடன் விரதம் இருக்கணும்னு நினைச்சாலும் அப்ப தான் நமக்கு நிறைய சவால்களும், தர்மசங்கடங்களும் வந்து வரிசைகட்டி நிற்கும். அப்படிப்பட்ட சூழலில் பேசி விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் திணறி விடுவர் சில பக்தர்கள். அவர்கள் மனம் சுத்தமாகவே இருக்கும். தெரிந்தோ தெரியாமலே மவுன விரதத்தில் சின்னதா ஒரு தடை வந்து விடும். அவங்க என்ன செய்றதுன்னு பார்க்கலாமா…
விடிந்தால் திருக்கார்த்திகை என்ற மகாதீபத்திருநாள். எப்படி விரதம் இருக்குதுன்னு பலருக்கும் தெரியாது. அவங்களுக்காக சில முக்கியமான விஷயங்கள்தான் இவை.
திருக்கார்த்திகை விரதம் பரணி விரதத்தோடு சேர்ந்து துவங்க வேண்டும். பரணியில் இருக்க முடியாதவர்கள் திருக்கார்த்திகை அன்று காலையில் இருந்தே உபவாசமாக இருக்கலாம். காலை எழுந்ததும் நீராடி விட்டு உபவாசம் இருக்கலாம். வயதானவர்கள், கர்ப்பிணிகள், பால் கொடுக்கும் தாய்மார்கள், மாத்திரை சாப்பிடுபவர்கள் மற்றும் தவிர்க்க முடியாத நோயாளிகள் அனைவரும் பட்டினியே இருக்கக்கூடாது.
ஆனால் இவர்கள் அன்றைய தினம் எளிமையான உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். பட்டினி இருப்பவர்கள் தண்ணீர் தாராளமாகக் குடிக்கலாம். நடுவில் இளநீர், பால் கூட குடிக்கலாம். பழச்சாறும் தேவைப்படுபவர்கள் எடுக்கலாம். மௌனவிரதம் இந்த நாளில் இருப்பது மிக மிக விசேஷம்.
காலை எழுந்தது முதலே இந்த மௌனவிரதம் இருக்கலாம். நடுவில் திடீர்னு பேசிட்டா விரதத்தைக் கைவிட வேண்டாம். ‘சிவாயநம, முருகா, அண்ணாமலைக்கு அரோகரா’ன்னு சொல்லிட்டு விரதத்தை மீண்டும் தொடரலாம்.
புதுசா விரதம் இருப்பவர்கள் தப்பு பண்றது இயற்கைதான். அதனால் சங்கோஜம் வேண்டாம். மேற்படி விரதத்தை அனுசரிக்கலாம். மாலை தீபம் பார்க்கும் வரை விரதம் இருக்கலாம்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


