இன்னொரு பாகிஸ்தானாக மாறி வருகிறதா துருக்கி? பயங்கரவாதத்தை அரசாங்க கருவியாக துருக்கி பயன்படுத்துகிறதா? துருக்கிக்கு இந்தியா கொடுத்த பதிலடி.. ஒரே நேரத்தில் இந்தியாவையும் ஆப்கானிஸ்தானையும் தாக்குவோம்.. காமெடி செய்யும் பாகிஸ்தான்.. இந்தியா நினைத்தால் 5 நிமிடத்தில் பாகிஸ்தான் இருக்காது..!

இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதற்கு பதிலடி கொடுக்கும் இந்தியாவின் வியூகம் குறித்து, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை நிபுணர் மணீஷ் திவாரி அவர்கள் சமீபத்தில் அளித்த நேர்காணலில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை…

india vs turkey

இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதற்கு பதிலடி கொடுக்கும் இந்தியாவின் வியூகம் குறித்து, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை நிபுணர் மணீஷ் திவாரி அவர்கள் சமீபத்தில் அளித்த நேர்காணலில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

சமீபத்தில் குஜராத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய ஒரு பயங்கரவாத குழு கைது செய்யப்பட்டது. இது இந்தியாவின் உளவு நிறுவனங்களின் விழிப்புணர்வை உறுதிப்படுத்துகிறது. அகமதாபாத்தில் ஒருவர் கல்லறையில் இருந்து ஆயுதங்களை எடுத்தபோது கைது செய்யப்பட்டார். இதன் மூலம், உளவு அமைப்புகள் இவர்களை கண்காணித்து வந்ததும், இவர்கள் களத்தில் செயல்பட தொடங்கியதும் உடனடியாக பிடிக்கப்பட்டதும் தெளிவாகிறது. கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் சுமார் 200 முதல் 300 இடங்களில் தீவிரவாதிகளை பிடிப்பதற்காக சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர், தனக்கு கூடுதல் அதிகாரங்களை பெறவும், மே மாதம் நடந்த இராணுவ மோதலில் இந்தியா தோற்றுவிட்டதாக தனது மக்களுக்கு காட்டவும், இத்தகைய தாக்குதல்களை இந்தியா மீது திணிக்க முயல்கிறார். பாகிஸ்தான் இரண்டு முனைகளில் (இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான்) போர் தொடுக்க தயாராக இருப்பதாப் பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், மணீஷ் திவாரி, “இந்த நேரத்தில் பாகிஸ்தான் ஒரு முனையைக்கூட நிர்வகிக்கும் நிலையில் இல்லை” என்று உறுதியாக கூறினார்.

பாகிஸ்தானுக்கு இப்போது இந்தியாவை விட ஆப்கானிஸ்தான் தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்திய தாக்குதல்களுக்கு பதிலடி குறித்து இந்தியா மௌனம் காக்கும் நிலையில், ஆப்கானிஸ்தான் பிரதமர் முல்லா அப்துல் கனி பராதர், தங்கள் நாட்டின் முக்கிய வணிகர்களை அழைத்து, “பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை சார்ந்திருப்பதை கைவிட்டு, மாற்று வர்த்தக வழிகளைத் தேடுங்கள்” என்று நிரந்தர முடிவை அறிவித்துள்ளார். இது பாகிஸ்தானுக்குப் பெரும் பொருளாதார அடியாக இருக்கும்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்குள் ஒரு தரைவழி போரைத் தொடங்கினால், அது பஞ்சாப் ஆதரவு தளத்தில் இருந்து செய்ய முடியாது. அது கைபர் பக்துன்வா அல்லது பலூசிஸ்தான் வழியாக செய்யப்பட வேண்டும். இந்த இரு மாகாணங்களும் பாகிஸ்தான் இராணுவத்தை விரோப் போக்கோடு அணுகுபவை. இதனால், பாகிஸ்தான் படைகளின் நகர்வுகள் உடனடியாக தாலிபான்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும், ஆப்கானிஸ்தானின் புவியியல் அமைப்பு காரணமாக, தரைவழி படையெடுப்பு என்பது சாத்தியமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் இப்போது பயன்படுத்தப்படும் பயங்கரவாத தந்திரங்கள் வழக்கமான பாகிஸ்தானிய குழுக்களை போல இல்லை. குஜராத் சம்பவத்தில், அந்த தாக்குதல் ஆப்கானிஸ்தானில் இருந்து திட்டமிடப்பட்டது போல காட்ட பாகிஸ்தான் ஆதரவாளர்கள் முயன்றனர். ஆனால், ஐ.எஸ்.கே.பி (ISIS-K) என்பது பாகிஸ்தான் உளவுத்துறை உருவாக்கிய ஒரு குழு என்றும், இது கவனத்தை திசை திருப்பும் முயற்சி மட்டுமே என்றும் திவாரி தெரிவித்தார்.

இந்தியாவில் இப்போது காணப்படும் வெள்ளை காலர் பயங்கரவாதம், துருக்கியின் ஆதரவுள்ள உலகளாவிய முஸ்லிம் சகோதரத்துவத்தின் பாணியில் இருக்கலாம். துருக்கி, ஐ.எஸ்.ஐ.எஸ் போலவே பயங்கரவாதத்தை ஒரு அரசாங்க கருவியாக பயன்படுத்துகிறது.

துருக்கி, இந்தியாவை தவறாகச் சித்தரிக்கும் வகையில் செய்தி வெளியிடுவதன் மூலம் இரண்டாவது பாகிஸ்தானாக மாறி வருகிறது. இந்திய இராணுவ கப்பல்கள் மத்தியதரைக் கடலில் சைப்ரஸ் மற்றும் கிரேக்கப் படைகளுடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டது, துருக்கிக்கு இந்தியா கொடுத்த ஒரு தெளிவான பதில் என்றும், இந்தியாவின் பதிலடி இராணுவ நடவடிக்கை மட்டுமல்லாமல், இராஜதந்திர மற்றும் பூகோளரீதியாகவும் அமையும் என்றும் அவர் உறுதியாக கூறினார்.