ஆபரேஷன் சிந்தூர் 1.0 போல் 2.0 இருக்காது.. பாகிஸ்தான் வரைபடத்திலேயே இல்லாத அளவில் காணாமல் போகும்.. முப்படைகள் ஒருங்கிணைப்பு.. எந்த நேரத்திலும் தாக்குதல் இருக்குமா? பயங்கரவாதத்திற்கு பாடம் புகட்ட நேரமில்லை.. இனி களையெடுப்பு தான் ஒரே வழி..

2025 நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கொடூரமான கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, இந்தியாவின் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) இந்த தாக்குதலைத் “தேச விரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத…

sindhoor

2025 நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கொடூரமான கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, இந்தியாவின் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) இந்த தாக்குதலைத் “தேச விரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத செயல்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தியா, பயங்கரவாதத்தை ஒரு போராகவே கருதுகிறது என்ற பழைய நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்த மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு தெளிவான மற்றும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

முன்னதாக நிகழ்ந்த “ஆபரேஷன் சிந்துர் 1.0”-ல், இந்திய படைகள் தங்கள் வலிமையை காட்டின. ஆனால், அப்போது ஒருவித மனிதாபிமானம் கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது இந்தியப் பாதுகாப்பு அமைப்பு அந்த அனுபவத்தில் இருந்து ஒரு தெளிவான பாடம் கற்றுக்கொண்டுள்ளது.

சிந்துர் 1.0 இன் வெற்றி: அந்த நடவடிக்கை இந்திய பாதுகாப்புப் படைகளுக்குள் ஒரு அற்புதமான முப்படைகள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது. இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று படைகளும் ஒன்றிணைந்து செயல்பட்ட விதம், எதிரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடற்படையின் நகர்வுகளும், விமானப்படையின் துல்லியமான திறமையும், இராணுவத்தின் துணிச்சலும் சேர்ந்து பாகிஸ்தானை விரைவில் மண்டியிடச் செய்தன.

பயங்கரவாதம் – ஒரு போர்: பயங்கரவாத செயலை வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையாக கருதாமல், அது போருக்கு நிகரானது என்ற நிலைப்பாட்டை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.

“ஆபரேஷன் சிந்தூர்” இன்னும் முடிவடையவில்லை என்றும், அது ஒரு சிறிய இடைவெளி, ஒரு வேலை, ஒரு எச்சரிக்கை மட்டுமே என்றும் இந்திய ஆயுதப்படைகளின் அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு மிக கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

“பாகிஸ்தான் மீண்டும் அதே தவறை செய்தால், இந்தியாவின் பதில் இந்த முறை மிகவும் கடுமையானதாக இருக்கும். சிந்துர் 1.0-ல் கடைப்பிடித்த எந்த கருணையும் இந்த முறை இருக்காது.”

“இந்த முறை பாகிஸ்தானுக்கு சுதாரித்து கொள்ளக்கூட வாய்ப்பு கிடைக்காது. அடுத்த நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் தனது புவியியல் வரைபடத்திலேயே இருக்குமா இல்லையா என்று யோசிக்க வேண்டியிருக்கும்.”

இந்திய இராணுவப் படைகள், பாகிஸ்தான் எல்லைகளில் தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டு, எந்த நேரத்திலும் தாக்குதலை தொடங்கத் தயாராக இருப்பதை இது குறிக்கிறது.

டெல்லி தாக்குதலுக்கு பிறகு, பயங்கரவாதத்திற்கு பதிலளிப்பது குறித்த இந்தியாவின் கோட்பாடு தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இனி, பயங்கரவாதத்திற்கு பாடம் புகட்ட நேரம் இல்லை; “களையெடுப்பு” தான் ஒரே வழி என்று இந்தியா தீர்மானித்துள்ளது.

“இந்தியாவின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால், தக்க பதிலடி கொடுக்கப்படும். அதன் நேரம், முறை மற்றும் நிபந்தனைகளை நமது படைகளே தீர்மானிக்கும். பயங்கரவாதத்தின் தலைவர்களையும் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் அரசையும் இனிமேல் நாம் தனித்தனியாக பார்க்க மாட்டோம்; இரண்டையும் ஒன்றாகவே கருதுவோம்.”

அணுகுண்டை காட்டி அச்சுறுத்தும் வெற்று மிரட்டல்களுக்கு எல்லாம் இந்தியா அஞ்சப் போவதில்லை. இந்த அச்சுறுத்தலை சந்திக்கும் வல்லமை இந்தியாவுக்கு உள்ளது.”

இந்தியாவின் இந்த உறுதியான நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு பல்வேறு முனைகளில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள், பாகிஸ்தானுடனான வர்த்தக வாயில்களை மூடியுள்ளனர். அத்துடன் இஸ்லாமாபாத்திலும் தாக்குதல் நிகழ்ந்திருப்பதால், பாகிஸ்தான் தற்போது பல பக்கங்களிலிருந்தும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

இந்தியாவின் புதிய அணுகுமுறை, எல்லைக்கு அப்பால் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அவற்றிற்கு ஆதரவளிக்கும் அரசுகள் மீதான தனது சகிப்புத்தன்மையின்மை என்ற கொள்கையைத் தெளிவாக பறைசாற்றியுள்ளது. “ஆபரேஷன் சிந்தூர் 2.0” என்பது வெறும் தற்காப்பு நடவடிக்கை அல்ல, அது பயங்கரவாதத்தை அதன் வேரிலிருந்தே பிடுங்கி எறியும் ஒரு திட்டமிட்ட “களையெடுப்பு” நடவடிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.