சகல ஐஸ்வர்யமும் பெருகணுமா… தினமும் மறக்காம கார்த்திகை மாதத்துல இதைச் செய்யுங்க..!

கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் என்ன? வாங்க பார்க்கலாம். கார்த்திகை மாதம் அநேக விசேஷங்களை உள்ளடக்கியது. கார்த்திகை என்ற பெயரே விசேஷமானது. கார்த்திகை பெண்களுக்காக பெயர் வைத்திருக்கிறதாக நினைக்கிறார்கள். அதுவும் ஒரு காரணம். கார் என்றால்…

கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் என்ன? வாங்க பார்க்கலாம்.

கார்த்திகை மாதம் அநேக விசேஷங்களை உள்ளடக்கியது. கார்த்திகை என்ற பெயரே விசேஷமானது. கார்த்திகை பெண்களுக்காக பெயர் வைத்திருக்கிறதாக நினைக்கிறார்கள். அதுவும் ஒரு காரணம். கார் என்றால் மேகம். கார் என்கின்ற மேகத்தை அதிகமாக சூழ்ந்து எடுத்துக் கொண்டு மழையாக பெய்யக்கூடிய மாதம் கார்த்திகைன்னு சொல்வாங்க.

அதனால தான் அந்தக் காலத்துல ஐப்பசி, கார்த்திகை அடைமழைன்னு சொல்வாங்க. கார்த்திகை 1 முதலே 30 நாள்களும் விசேஷமானவைதான். கார்த்திகை 1 (17.11.2025) முடவன் முழுக்கு. அடுத்து ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு விரதத்தைத் துவங்கும் மாதம் இதுதான்.

கார்த்திகை 1ல்தான் விரதம் இருக்கும் பக்தர்கள் மாலை அணியத் தொடங்குவார்கள். கார்த்திகை மாதம் முழுவதுமே நாம் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த மாதத்திற்கு விளக்கிடும் மாதம் என்று பெயர். நிலை வாசலில் 2 அகல் விளக்கு தினமும் ஏற்றி வைக்க வேண்டிய மாதம் இது. தினமும் வாசலில் 2 அகல் விளக்குகள் ஏற்றினால் சகல ஐஸ்வர்யமும் பெருகும் என்பது ஐதீகம்.

இந்த மாதத்தில் பல விரத நாள்கள் வருகின்றன. பாவத்தைப் போக்கும் பரணி தீபம் வருகிறது. இது மகாதீபத்துக்கு முந்தைய நாளில் ஏற்ற வேண்டிய தீபம். எமனை வழிபடக்கூடிய நாள் பரணி. எமனுக்கான வழிபாடுக்கு பயம் தேவையில்லை. ஒருவர் இறந்து விட்டால் 30வது நாள் அவருக்கு ஏற்றக்கூடிய மோட்ச தீபம், அதைத் தாண்டி நாம் ஒவ்வொரு உயிர்களுக்கும் இடும் பரணி தீபமும் எமனின் அருளைப் பெற்றுத் தரும்.

இத்தகைய அற்புதமான நாள் வரும் டிசம்பர் 2ம் தேதி வருகிறது. மகாதீபம் டிசம்பர் 3ம் தேதி வருகிறது. இது மட்டும் அல்லாமல் கார்த்திகை மாதம் முழுவதும் திங்கள் கிழமை சோமவாரம். சிவன் கோவில்களில் சங்காபிஷேகம் செய்வார்கள். இதைப் பார்த்தாலே போதும். பெரும் புண்ணியம் கிட்டும். அதனால் அதையும் மிஸ் பண்ணிடாதீங்க.