வங்கதேசத்திற்கு ஒரு பாயாசத்தை போட்டுற வேண்டியதான்.. இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்.. இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை ஊக்குவித்த பாகிஸ்தான் வறுமையில் வாடுகிறது. இதை பார்த்து கூட வங்கதேசத்திற்கு புத்தி வரவில்லையா? இந்தியாவை பகைத்தவர்கள் அழிந்து போவார்கள்.. இதுதான் வரலாறு..!

இந்தியா தனது வரலாற்றில் பல துரோகங்களை சந்தித்துள்ளது. அதில், இந்தியாவால் உருவாக்கப்பட்ட நாடான வங்கதேசம், தற்போது இந்தியாவுக்கு எதிராக செயல்பட தொடங்கி இருப்பது புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசம் இப்போது ‘கிழக்கு பாகிஸ்தானாக’ மாறிக்கொண்டிருக்கிறது…

bangladesh1

இந்தியா தனது வரலாற்றில் பல துரோகங்களை சந்தித்துள்ளது. அதில், இந்தியாவால் உருவாக்கப்பட்ட நாடான வங்கதேசம், தற்போது இந்தியாவுக்கு எதிராக செயல்பட தொடங்கி இருப்பது புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசம் இப்போது ‘கிழக்கு பாகிஸ்தானாக’ மாறிக்கொண்டிருக்கிறது என்பதற்கான தெளிவான சமிக்ஞைகள் கிடைத்துள்ளன. இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களுக்கு வியூகம் அமைக்கும் ஒரு தீவிரவாத கூடாரமாக வங்கதேசம் மாறிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அக்டோபர் 30 அன்று, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தளபதியான சையபுல்லா வங்கதேசத்தில் ஒரு வீர உரையை நிகழ்த்தியுள்ளார். அந்த உரையில், “லஷ்கர்-இ-தொய்பாவின் மிக முக்கியமான தளபதிகள் வங்கதேசத்தில் இருக்கிறார்கள்; அவர்கள் இந்தியாவுக்கு எதிரான தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள்; அதை அவர்கள் நிச்சயம் செய்து முடிப்பார்கள்; நாம் அனைவரும் ஜிஹாதில் இணைவோம்” என்று பேசியுள்ளார்.

இது, 1971-ல் இந்தியா மெனக்கெட்டு உருவாக்கிய ஒரு நாடு, இப்போது இந்தியாவுக்கு எதிரான தாக்குதலுக்கு கூடாரமாக மாறிவிட்டது என்பதற்கான மிகச்சிறந்த உதாரணம் என்று பார்க்கப்படுகிறது. நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், தற்போது வங்கதேசத்தின் தலைவராக அமர்ந்துள்ளார். இவரை ‘அமெரிக்காவின் ‘கொத்தடிமை’ என்றும் விமர்சிக்கப்படுகிறது.

இவர் இப்போது ‘கிரேட்டர் வங்கதேசம்’ என்ற புதிய கனவுடன் பயணிப்பதாக காட்டிக்கொள்ளத் தொடங்கி இருக்கிறார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசத்துடன் இணைக்கும் ஒரு வரைபடத்தை பாகிஸ்தான் இராணுவ அதிகாரியிடம் இவர் வெளியிட்டது, இந்தியாவுக்கு எதிரான விஷயங்களை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்ற இவரது உள்நோக்கத்தை தெளிவாக காட்டுகிறது.

இதுவரை வங்கதேசம், ஜவுளி போன்ற துறைகளில் இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டு வளர்ச்சி விகிதத்தை கொடுத்து வந்தது. அப்போது ஷேக் ஹசீனா அந்நாட்டின் தலைவராக இருந்தார். ஆனால், அத்தகைய வளர்ச்சியை வழங்கிய ஷேக் ஹசீனா, அமெரிக்காவின் கோரிக்கையான சென் மார்ட்டின் தீவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுத்ததாலோ அல்லது அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்பட்டதாலோ நாட்டை விட்டு விரட்டப்பட்டார் என்றும், தற்போது இந்தியாவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஷேக் ஹசீனா இல்லாததால், வங்கதேசம் ஒரு தாயை இழந்த குழந்தை போல திணறுவதாகவும், கண்ட கண்ட சக்திகள் எல்லாம் அமர்ந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான வேலைகளை செய்யும் ஒரு தீவிரவாத கூடாரமாக அது மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு வங்கதேசம் அடைக்கலம் கொடுப்பதை பார்த்துக் கொண்டு இந்தியா வேடிக்கை பார்க்காது. வங்கதேச எல்லையில் இந்தியா தனது இராணுவக் குவிப்பில் ஈடுபட்டிருக்கிறது. பமுனி (துப்ரி அருகில்), கிரிஷ்க் (பீகார் எல்லை அருகில்), சோப்ரா (மேற்கு தினாஜ்பூர் அருகில்) ஆகிய மூன்று முக்கியப் பகுதிகளில் இந்தியா தனது படைகளை குவித்துள்ளது.

கடந்த காலங்களில், வங்கதேச எல்லையில் வான் பாதுகாப்பு அமைப்புகளும் நகர்த்தப்பட்டுள்ளன. இந்தியா தனது எல்லைகளை பாதுகாக்க 100% தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு வங்கதேசம் அடைக்கலம் கொடுத்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்டதை போல, சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் வங்கதேசத்தின் மீதும் நடக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானின் ஒரே எஜமானன், வெள்ளை மாளிகையில் உள்ள அதிகாரம் தான். சமீபத்தில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரைவில் இந்தியா வர இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியர்களுடைய முக்கியத்துவத்தையும், இந்திய பொருட்கள் அமெரிக்காவுக்குள் வராததால் ஏற்படும் விளைவுகளையும் உணர்ந்ததாலேயே அவர் இந்தியாவுடன் மீண்டும் நெருக்கம் காட்ட தொடங்கியுள்ளார்.

ட்ரம்ப் மீண்டும் இந்தியாவுடன் நட்புடன் அணுகினால், இந்த சூழல் மாறலாம். ஆனால், யூனுஸ் போன்ற ஆட்சியாளர்கள் அதே மனநிலையில் இந்தியாவை அணுகி, லஷ்கர்-இ-தொய்பாவுக்கு அடைக்கலம் கொடுத்தால், வங்கதேசம் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஒரு யுத்தம் தவிர்க்க முடியாததாக மாறிவிடும் அபாயம் உள்ளது. வங்கதேசம் எல்லை மீறிச் செயல்பட்டால், அதற்கும் ஒரு பாயாசம் போட இந்தியா தயங்காது என்பது தான் உண்மை..