என்னடா இது வங்கதேசமும் எதிரியா மாறிடுச்சு.. இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம்.. சுற்றி வளைக்கப்பட்ட பாகிஸ்தான்.. கெடுவான் கேடு நினைப்பான்.. இந்தியாவை அழிக்க நினைத்தவர்கள் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை..

பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தானில் சுமார் 5,000 வங்காளதேசிகள் இணைந்துள்ளதாக வெளியான செய்திகள் பாகிஸ்தான் இராணுவத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன. பாகிஸ்தானுக்குள் நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களில் இவர்களின் ஈடுபாடு அதிகரித்துள்ளதாகவும், இது TTP-இன் கட்டமைப்புக்கே…

india pakistan afganistan

பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தானில் சுமார் 5,000 வங்காளதேசிகள் இணைந்துள்ளதாக வெளியான செய்திகள் பாகிஸ்தான் இராணுவத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன. பாகிஸ்தானுக்குள் நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களில் இவர்களின் ஈடுபாடு அதிகரித்துள்ளதாகவும், இது TTP-இன் கட்டமைப்புக்கே புதிய சவாலாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

TTP அமைப்பின் ஆள் சேர்ப்பு பிரிவினர், வங்காளதேசத்தில் நிலவும் குழப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, பல்வேறு குழுக்களுடன் தொடர்பை ஏற்படுத்தி ஆட்களை சேர்த்துள்ளனர். சட்டோகிராம், காக்ஸ் பஜார், டெக்னாஃப், சில்ஹெட், திரிபுரா ஆகிய பகுதிகளில் இருந்து இளைஞர்களை தீவிரமயமாக்கி, அவர்கள் சட்டோகிராம் – கராச்சி பாதையில் மறைமுகமாக கடத்தப்பட்டுள்ளனர்.

TTP-இன் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஹவாலா சேனல்கள் மூலமாக பணம் செலுத்தி, இந்த மனிதவளத்தை பெற்றிருப்பதாக உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

2023-ஆம் ஆண்டின் இறுதி முதல், சுமார் 5,000 வங்காளதேசிகள் ஆப்கானிஸ்தானின் குராம் மற்றும் நூரிஸ்தான் பகுதிகளிலும், பாகிஸ்தானின் பன்னு அருகிலுள்ள பயிற்சி முகாம்களிலும் பயிற்சி பெற்று, அவர்களுக்கு “இத்தேஹாத் லஷ்கர்” என்ற புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

TTP அமைப்பு இதுவரை பெரும்பாலும் பஷ்தூன் பழங்குடியினரின் பிம்பத்துடன் இயங்கி வந்தது. ஆனால், இப்போது பஷ்தூன் மட்டுமின்றி வங்காளதேசிகளை சேர்ப்பது கூடுதல் வலிமை பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. எனவே TTP-இன் தாக்குதல் பணிகள் இன்னும் உக்கிரமாக இருக்கும். இதனால் பாகிஸ்தான் அச்சத்துடன் உள்ளது.

வங்கதேச இராணுவத் தலைவர் பாகிஸ்தான் இராணுவ தலைவரை சந்தித்தபோது, இந்த ஊடுருவலுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும், பாகிஸ்தானின் குழப்பமே இதற்கு காரணம் என்றும் வங்கதேசம் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள், தங்கள் பழைய வலையமைப்பை உயிர்ப்பிக்க வங்கதேசத்தின் காக்ஸ் பஜார், சட்டோகிராம் போன்ற பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இதன் முக்கிய நோக்கம், இந்தியாவில் உல்ஃபா மற்றும் என்.எஸ்.சி.என் போன்ற குழுக்களை தூண்டிவிட்டு, மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த முயல்வதாகும்.

ஆனால் இந்தியாவிற்கு எதிராக செயல்பட முயன்றபோது, அந்த நெட்வொர்க்குகளையே TTP பயன்படுத்தியதால், பாகிஸ்தானின் சொந்த வீடே தீப்பிடித்து எரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நிதி திரட்டுவதற்காக, ISI மற்றும் வங்கதேச ராணுவத்தின் ஒரு பிரிவினர் இணைந்து போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கை கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர். இது TTP-இன் செயல்பாடுகளுக்கு பணத்தை வழங்கும் சுழற்சியை உருவாக்கும்.

பாகிஸ்தான் பிற நாடுகளின் விவகாரங்களில் தலையிட முயன்றால், அதன் விளைவுகள் சொந்த நாட்டிலேயே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு முக்கிய உதாரணமாகும்.