அணைகளில் சுத்தமாக தண்ணீர் இல்லை.. பாலைவனமாகிறதா பாகிஸ்தான்? அரசுக்கு எதிராக ஒன்றிணையும் தீவிரவாதிகளின் குழுக்கள்.. திடீர் திடீரென காணாமல் போகும் அப்பாவி பாகிஸ்தான் மக்கள்.. சொந்த நாட்டிலேயே வெடிக்கும் போராட்டம்.. இந்தியாவுக்கு வேலையே இல்லை.. பாகிஸ்தான் தானாக அழிந்துவிடுமா?

பாகிஸ்தானின் சிந்து மாகாணம், இப்போது அந்நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. பலுசிஸ்தான் மற்றும் பஷ்தூன் பகுதிகளின் தேசியவாத இயக்கங்களுக்கு பிறகு, தற்போது சிந்தி தேசியவாதம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, கராச்சி மற்றும்…

pakistan1

பாகிஸ்தானின் சிந்து மாகாணம், இப்போது அந்நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. பலுசிஸ்தான் மற்றும் பஷ்தூன் பகுதிகளின் தேசியவாத இயக்கங்களுக்கு பிறகு, தற்போது சிந்தி தேசியவாதம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, கராச்சி மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட தொழிற்துறை மையங்களை கொண்ட இந்த பிராந்தியத்தில், பாகிஸ்தான் ராணுவத்தின் அடக்குமுறை உத்திகளும், இயற்கை வள சுரண்டலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் சமீபகாலமாக காணாமல் போகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன என்ற திடுக்கிடும் தகவல் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில், சாதாரண உடையில் வரும் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் மற்றும் உளவுத்துறைப் பிரிவுகள் சிந்தி தேசியவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் வீடுகளில் சோதனை நடத்தி, அவர்களை நள்ளிரவில் கைது செய்கின்றனர். அதன்பின் கைதானவர்கள் என்ன ஆனார்கள் என்று கூட தெரிவதில்லை என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் இராணுவம், சிந்தி தேசியவாத முன்னணி போன்ற குழுக்களை முழுமையாக அடக்காமல், அவர்களுக்கு எதிராக ‘ஆன்-ஆஃப்’ அழுத்த தந்திரத்தை பயன்படுத்துகிறது. அவர்களை போராட அனுமதிப்பது, பின்னர் கைது செய்து அடக்குவது என்ற சுழற்சி மூலம் தேசியவாத தலைமைகளை நீர்த்து போக செய்ய முயற்சி நடக்கிறது.

காணாமல் போன இரண்டு சிந்தி நபர்களான கானி அமன் சந்த் மற்றும் சமர்த் மெஹ்ரானி ஆகியோருக்காக, ஜெய்சிங் இயக்கம் தலைமையில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த அடக்குமுறையால் தாங்கள் சொந்த நாட்டிலேயே அந்நியர்களாக உணர்வதாக சிந்தி தேசியவாதிகள் குமுறுகின்றனர்.

சிந்து மாகாணத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக நீர் பற்றாக்குறை உள்ளது.பாகிஸ்தான் இராணுவம் தார் பாலைவன பகுதியில் 40,000 முதல் 50,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. இங்கு சவுதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்காக உணவு பொருட்களை உற்பத்தி செய்ய கால்வாய்களை திருப்பிவிட்டு, ‘ரிங் சாகுபடி’ முறையை பயன்படுத்துகின்றனர்.

இதன் காரணமாக, சிந்து நதியின் கீழ் பகுதியில் நீர் வரத்து கடுமையாக குறைந்து, நிலத்தடி நீரில் அரேபிய கடலின் உப்பு நீர் ஊடுருவி, விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஓர் ஆஸ்திரேலிய நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, பாகிஸ்தான் மிக கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் அணைகளால் 30 நாட்களுக்கு மட்டுமே நீரை தேக்கி வைக்க முடியும் என்ற தகவல், சிந்தி மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சி, பாகிஸ்தானின் முக்கிய தொழில்துறை மற்றும் துறைமுக மையமாக உள்ளது. ஆனால், இந்நகரம் பல பகுதிகளில் இன்னும் குற்ற கும்பல்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சிந்தி தேசியவாத இயக்கங்கள் இப்போது தனித்தனியாக இல்லாமல், பலுசிஸ்தான் மாணவர் குழுக்கள் மற்றும் பஷ்தூன் தஹஃபுஸ் இயக்கங்களுடன் இணைந்து ஒரு ஐக்கிய முன்னணி உருவாக்கத் தொடங்கியுள்ளன. இது பாகிஸ்தான் அரசுக்கு புதிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.

சிந்தி தேசியவாத தலைவர்கள் நெடுஞ்சாலைகளை மறித்து, நகரங்களில் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்க திட்டமிடுவதாகத் தெரிகிறது.

பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு உயிர்நாடியாக இருக்கும் சிந்து மாகாணம், இதேபோல் கொந்தளித்தால், பாகிஸ்தான் அரசுக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தும்.