திங்கள் கிழமையான இன்று (27.10.2025) கந்த சஷ்டியின் 6வது நாள் விரதம் வருகிறது. இன்றுதான் சூரசம்ஹாரம். இன்று ஒருநாள் விரதம் எப்படி இருப்பதுன்னு பார்க்கலாம்.
இன்று அதிகாலை 6 மணிக்குள் விரதத்தைத் தொடங்க வேண்டும். ஒருநாள் மவுன விரதம் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும். அன்று எப்போது எழுந்து குளிக்கிறீர்களோ அப்படி எழுந்ததுல இருந்தே விரதம் ஆரம்பிச்சிடும். குளிச்சிட்டுப் பூஜையை ஆரம்பிச்சிடலாம்.
எல்லா தெய்வங்களுக்கும் மலர் அர்ச்சனை செய்யலாம். காலையில் நைவேத்தியம் எளிய முறையில் படைக்கலாம். திருச்செந்தூரில் 4மணிக்கு மேல் தான் சூரசம்ஹாரம் ஆரம்பிக்கும். அது முழுவதையும் பார்த்து விட்டு சூரனின் தலை விழுந்த உடனே கண்டிப்பாக அனைவரும் குளிக்க வேண்டும். காலையில் குளித்தாலும், சாயங்காலமும் குளிக்க வேண்டும்.
குளித்ததும் சற்கோண தீபம் ஏற்ற வேண்டும். இன்று காலையிலும், மாலையிலும் சற்கோண தீபம் ஏற்ற வேண்டும். இன்று வ என்ற கடைசி எழுத்திலே தீபம் ஏற்ற வேண்டும். மாலையில் சரவணபவ என்ற எல்லா எழுத்துகளிலும் ஏற்ற வேண்டும். பால், வாழைப்பழம், கொய்யாப்பழம், ஆப்பிள் என என்னென்ன பழங்கள் இருக்கோ எல்லாவற்றையும் வைத்து வழிபடலாம். 6 வகையான கலவை சாதங்கள் செய்யலாம்.
சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, கற்கண்டு சாதம், கருவேப்பிலை சாதம், சாம்பார்சாதம் என செய்யலாம். முடியாதவர்கள் ஏதாவது ஒரு நைவேத்தியமாவது பண்ணலாம். முருகனுக்கு திருப்புகழ், கந்தர் அலங்காரம், அனுபூதி பாராயணம் பண்ணலாம்.
தீப, தூப ஆராதனை செய்துவிட்டு நமது பிரார்த்தனையை முருகப்பெருமானிடம் முறையிட்டு வழிபடலாம். இந்த வழிபாடு முடிந்ததும் விரதத்தைப் பிரசாதம் சாப்பிட்டு விட்டு விரதத்தை நிறைவு செய்யலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



