விஜய் கட்சி ஆரம்பித்த நேரம் சரியில்லை.. அவரால் ஆட்சி அமைக்க முடியாது.. எந்த கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. திமுக கூட்டணி மைனாரிட்டி ஆட்சி அமைக்கும்.. தமிழகத்தில் பாஜக 2041ல் தான் ஆட்சி அமைக்கும்.. அண்ணாமலைக்கு முதல்வர் பதவியை விட பெரிய பதவி கிடைக்கும்.. பிரபல ஜோதிடரின் கணிப்பு..!

நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு, அண்ணாமலையின் வளர்ச்சி, 2026ல் ஆட்சி அமைப்பது யார் குறித்து பிரபல ஜோதிடர் வாமனன் சேஷாத்ரி அளித்த கணிப்புகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவரது கணிப்புகளை…

vijay annamalai dmk

நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு, அண்ணாமலையின் வளர்ச்சி, 2026ல் ஆட்சி அமைப்பது யார் குறித்து பிரபல ஜோதிடர் வாமனன் சேஷாத்ரி அளித்த கணிப்புகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவரது கணிப்புகளை தற்போது பார்ப்போம்.

1. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: மெஜாரிட்டி கிடைக்காது, மைனாரிட்டி ஆட்சிதான்!

ஜோதிடரின் கணிப்புப்படி, வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை. அமையவிருப்பது ஒரு மைனாரிட்டி கவர்ன்மென்ட் ஆக இருக்கும். அதாவது, கூட்டணிக்கட்சிகளின் ஆதரவு அல்லது சிறிய கட்சிகளின் ஆதரவை நம்பியே ஆட்சி அமைக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும்.

தற்போதைய கிரக நிலைகளின்படி, தி.மு.க. கூட்டணிக்கு ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால், அது மைனாரிட்டி பலத்துடன் இருக்கும். கூட்டணியில் யாராவது விலகி சென்றால் கூட, நிலைமையை சமாளித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தி.மு.க.வுக்கே உள்ளது. எதிர்க்கட்சியில் பலம் வாய்ந்த சக்தியாக அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியே இருக்கும்.

2. நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் (தமிழக வெற்றிக் கழகம்)

நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி மற்றும் அதன் எதிர்காலம் குறித்து ஜோதிடர் பல அதிர்ச்சிகரமான கணிப்புகளை வெளியிட்டுள்ளார். விஜய் கட்சி ஆரம்பித்த நேரம் துரதிர்ஷ்டவசமாக சரியில்லை. கட்சி ஆரம்பித்த காலகட்டம் ராகு திசையில் சனி புத்தி நடந்த காலமாகும். இந்த அமைப்பு, கட்சியைச் சரியாக நிலைநிறுத்தவும், பெரிய அரசியல் சவால்களை எதிர்கொள்ளவும் சாதகமாக இல்லை.

இந்த கால கட்டத்தில் கட்சி ஆரம்பித்திருப்பதால், அவரால் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. அவரது ஜாதக அமைப்பு தற்போதைய நிலையில் அரசியல் சவால்களை சமாளிப்பதற்கு பதிலாக, நடிப்புத் தொழிலுக்கே சிறப்பாக கைகொடுக்கிறது.

வரும் ஜனவரி – பிப்ரவரி வரை விஜய்க்கு நேரம் சாதகமாக இல்லை. ஆனாலும் 2026 தேர்தலில்சில எம்.எல்.ஏ.க்களை பெற வாய்ப்புள்ளது. ஆனால், அமைச்சர் பதவி அல்லது ஆட்சியமைக்கும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. அவருக்கு சரியான அரசியல் ஆலோசகர்கள் இல்லை.

3. அண்ணாமலையின் எதிர்காலமும் பா.ஜ.க.வின் எழுச்சியும்

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் வேகமான வளர்ச்சிக்கு காரணமாகக் கருதப்படும் தலைவர் அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் குறித்து நீண்ட கால அடிப்படையில் ஜோதிடர் கணித்துள்ளார். அண்ணாமலை தற்போது அரசியல் நடவடிக்கைகளில் சிறிது மென்மையாக இருப்பதற்கு காரணம், அவரது ராசி தான். அவரது ராசியின்படி, இந்த ஓராண்டு காலம் செவ்வாய் பலவீனமாக இருப்பதுதான். இது காரணமான மௌனம் என்று அவர் விளக்கினார்.

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு வரும் அவரது திதி பிரவேசத்தில், செவ்வாய் கிரகம் ஆட்சி பலம் பெறும். அதன் பிறகு, அவர் மிகவும் ஆக்ரோஷமான, பழைய வேகத்துடன் செயல்படும் தலைவராக மாறுவார். அவரது அரசியல் வளர்ச்சி அதன்பிறகு நிலையாக இருக்கும்.

அண்ணாமலையின் ஜாதகம் ஒரு மிகச்சிறந்த ஆளுமைத் தன்மை கொண்டது. அவருக்கு சுய ஜாதகத்தின்படி முதலமைச்சர் பதவிக்கு கண்டிப்பாக வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, அவர் முதல்வர் பதவியை தாண்டியும் மிக உயரிய பதவிகளை அடைய வாய்ப்புள்ளது என்று ஜோதிடர் தீர்க்கமாகக்கணித்துள்ளார்.

அண்ணாமலை உயரிய பதவிகளுக்கு வந்தாலும், தமிழ்நாடு மாநில அளவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகும். மாநில அரசியலை பொறுத்தவரை, பா.ஜ.க. தனது ஆட்சியை அமைப்பதற்கு 2036 அல்லது 2041 ஆம் ஆண்டு வரை ஒரு சில தேர்தல்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.