இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரிட்டனில் இருந்து ஒரு அரசியல் விமர்சகர் டாமி ராபின்சன் என்பவர், மோடியின் தலைமைத்துவம், சட்டவிரோத குடியேற்றம் மீதான அவரது நிலைப்பாடு, மற்றும் உலகளாவிய பயங்கரவாதத்தை கையாள்வது குறித்து தனது தனிப்பட்ட கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவரது இந்த கருத்துக்கள், இந்தியா மற்றும் பிரிட்டனில் நிலவும் அரசியல் சூழல்களை ஒப்பிட்டு பேசுகின்றன.
“பிரதமர் மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்,” என்று தனது உரையை தொடங்கிய டாமி ராபின்சன் ” மோடியை வெறுமனே ஒரு அரசியல்வாதியாக மட்டுமல்ல, ஒரு மக்கள் தலைவர் என்ற வகையில் நான் அவரை பார்க்கிறேன். உலக அரசியலில் ஜனரஞ்சகவாதம் என்பது டொனால்ட் ட்ரம்ப்பில் இருந்து தொடங்கவில்லை, அது மோடியுடன் இருந்து தான் தொடங்கியது. அவரது தேர்தல் வெற்றியே அதற்கு உதாரணம் என்று தெரிவித்தார்.
“இந்தியர்களை, குறிப்பாக இந்திய இந்துக்களை முதலில் வைக்கும் அவரது கொள்கைக்காக நான் மோடியை பாராட்டுகிறேன். உங்கள் நாடு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அவர் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது மிக முக்கியமான பணி. குறிப்பாக, இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் சட்டவிரோத குடியேற்றம், உங்கள் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று டாமி ராபின்சன் தெரிவித்தார்.
தபான் கோஷ் (Tapang Gosh) அவர்களுடன் பல வருடங்களுக்கு முன்பு நான் சந்திப்புகளை நடத்தியுள்ளேன். இந்து பெண்களுக்கு எதிரான வன்முறையை அவர் எவ்வாறு எதிர்த்தார் என்பதை நான் அறிவேன். காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் தெரியும். எங்கு வன்முறை மற்றும் மோதல்கள் நடந்தாலும், அதில் இந்துக்கள் இல்லை என்பது நமக்குத் தெரியும். அவர்கள் யார் என்பது நமக்கு உடனடியாகத் தெரியும். இஸ்லாமிய மேலாதிக்கம் மற்றும் வன்முறைக்கு எதிராக மோடி எடுக்கும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும், கவுரவம் மற்றும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் மோடியின் ஆதரவாளர் என்று டாமி ராபின்சன் கூறினார்.
இந்தியாவிலும் பிரிட்டனிலும் சட்டவிரோத குடியேற்றம் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. இது குறித்து பேசிய டாமி ராபின்சன் , “பிரிட்டனில் நாங்கள் சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்கொள்கிறோம். குறிப்பாக வங்காளதேசத்திலிருந்து வருபவர்கள். மோடி அரசாங்கம் வங்காளதேசத்திலிருந்து வரும் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கும் பிரிட்டனிற்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நாங்கள் பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த சிக்கல்களைக் கையாள்வதில், மோடி ஒரு முன்னோடியாக இருக்கிறார்” என்று டாமி ராபின்சன் தெரிவித்தார்.
“மேற்கத்திய நாடுகள் இஸ்லாமிய பயங்கரவாதத்தை உறுதியாக கையாண்டால், நாங்கள் ஏற்கனவே பல மசூதிகளை மூடியிருப்போம். ஆனால், அப்படி செய்யவில்லை. நாங்கள் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் பலவீனமாக இருக்கிறோம். எங்கள் நாட்டில் 40,000 முஸ்லிம்கள் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் உள்ளனர். அவர்களில் 50% பேர் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள். அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதுவும் நடக்கவில்லை.”
பாகிஸ்தான் குறித்து தனது கருத்துக்களை நேரடியாக முன்வைத்த டாமி ராபின்சன் “பாகிஸ்தானிலிருந்து வரும் அனைவரையும் தடை செய்திருக்க வேண்டும். பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு. பாகிஸ்தானில் இருந்து நல்ல விஷயம் எதுவும் வந்ததில்லை. உலகின் பெரும்பாலான பிரச்சனைகள் பாகிஸ்தானிலிருந்து வருகின்றன. அது தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கிறது. புன்னகைத்துக்கொண்டே உங்கள் நாட்டை அழிக்க முயற்சிக்கிறது. அது இந்தியாவுக்கு செய்கிறது, எங்களுக்கும் செய்கிறது, உலகெங்கிலும் செய்கிறது.”
“இந்த விஷயங்களில் நாங்கள் பலவீனமாக இருக்கிறோம். எங்களுக்கு ஒரு உறுதியான அரசாங்கம் தேவை. பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தான் மக்களை விடுவிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர்” என்று கூறி தனது பேச்சினை முடித்துக் கொண்டார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
