எம்ஜிஆரை வைத்து படம் தயாரித்த அசோகன்.. 5 வருடம் தாமதமாக ரிலீஸ்.. தயாரிப்பாளராக அசோகனுக்கு பல சிக்கல்.. ஆனாலும் ரிலீசுக்கு பின் நடந்த மேஜிக்..!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் அசோகன், வில்லன் கதாபாத்திரங்களில் தனித்துவமான முத்திரை பதித்தவர். நடிப்பை தாண்டி, அவர் ‘நேற்று இன்று நாளை’ என்ற திரைப்படத்தை தயாரித்ததன் பின்னணியில் சில சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. இந்த…

asokan

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் அசோகன், வில்லன் கதாபாத்திரங்களில் தனித்துவமான முத்திரை பதித்தவர். நடிப்பை தாண்டி, அவர் ‘நேற்று இன்று நாளை’ என்ற திரைப்படத்தை தயாரித்ததன் பின்னணியில் சில சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. இந்த படம் கிட்டத்தட்ட 5 வருடங்கள் தாமதமானாலும், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆர். மீது அசோகன் வருத்தமே படவில்லை என்று கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர்., மஞ்சுளா, மற்றும் அசோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த ‘நேற்று இன்று நாளை’ திரைப்படம், அசோகன் தயாரித்த படம் ஆகும். இந்த படத்தின் பூஜை 1969-ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆனால், படம் வெளியானது 1974ஆம் ஆண்டுதான். படத்தின் வெளியீடு ஐந்து ஆண்டுகள் தாமதமானது.

இந்த தாமதத்திற்கு முக்கிய காரணம், எம்.ஜி.ஆர். அரசியலில் மிகவும் பிசியாக இருந்தது மற்றும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு என்று கூறப்பட்டது. உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எம்ஜிஆரே தயாரித்து இயக்கியதால் அந்த படத்தில் அவர் தனது முழு கவனத்தையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அவர் ‘நேற்று இன்று நாளை’ படத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.

பொதுவாக, வேறொரு தயாரிப்பாளராக இருந்திருந்தால் இந்த தாமதம் அவருக்கு கடும் மன உளைச்சலைக் கொடுத்திருக்கும். ஆனால், நடிகர் அசோகன், எம்.ஜி.ஆர். மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக இந்த தாமதத்தை பற்றி ஒருபோதும் வருத்தப்படவே இல்லை என்று அவரது மகன் வின்சென்ட் அசோகன் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது எம்.ஜி.ஆர். மீதான அவரது ஆழமான நம்பிக்கையையும் மரியாதையையும் காட்டுகிறது.

’நேற்று இன்று நாளை’ திரைப்படம் 5 வருடங்கள் தாமதமாக ரிலீஸ் ஆனாலும், பெரும்பாலான திரையரங்குகளில் 150 நாட்கள் ஓடியது. ஒரு தயாரிப்பாளராக அசோகனுக்கு இந்த படம் லாபம் தான் என்றும் கூறப்பட்டது.