அ.தி.மு.க.வின் கூட்டணியிலிருந்து பா.ஜ.க. வெளியேறினால், அதன் பிறகு என்ன செய்வது என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு மெகா திட்டத்தை வகுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க.வை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி, தமிழகத்தில் பா.ஜ.க.வை ஒரு முக்கிய சக்தியாக உயர்த்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.
அமித் ஷாவின் மெகா யோசனை.. அண்ணாமலை தலைமையில் கூட்டணி: முதலில், தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலையை நியமித்து, அவரது தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும். பிறகு, சிறிய கட்சிகள் முதல் நடுத்தர கட்சிகள் வரை அனைத்தையும் கூட்டணியில் இணைக்க வேண்டும். குறிப்பாக, பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் தங்கள் பக்கம் கொண்டு வர வேண்டும்.
மேலும், ஐக்கிய ஜனதா தளம், புதிய தமிழகம், ஜான் பாண்டியன் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இந்த வியூகத்தின் மூலம், அ.தி.மு.க. தனிமைப்படுத்தப்பட்டு, பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி குறைந்தபட்சம் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தைப் பிடித்துவிடும் என்று அமித் ஷா கருதுவதாக கூறப்படுகிறது.
சாத்தியமான அரசியல் சூழ்நிலைகள் தி.மு.க. கூட்டணி உடைந்துபோகாமல் அப்படியே இருந்தால், மீண்டும் அவர்களே ஆட்சிக்கு வர அதிக வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை, தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் மற்றும் விசிக கட்சிகள் வெளியேறி விஜய் பக்கம் சேர்ந்தால், விஜய் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உண்டு.
இந்த புதிய அரசியல் கணக்கீட்டின்படி, தி.மு.க. அல்லது விஜய் ஆகிய இரு கட்சிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்துவிடும். இந்த சூழலில், அ.தி.மு.க.வை நான்காவது இடத்துக்கு தள்ளிவிட்டு, பா.ஜ.க. மூன்றாவது இடத்தை பிடித்துவிடும் என அமித்ஷா நம்புகிறார். அதன் பிறகு, எதிர்காலத்தில் தி.மு.க. அல்லது விஜய் கட்சியை பின்னுக்குத் தள்ளி, பா.ஜ.க. இரண்டாவது இடத்திற்கு முன்னேறிவிடலாம் என்று ஒரு தொலைநோக்கு பார்வையுடன் பா.ஜ.க. செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டம், தமிழக அரசியலில் பா.ஜ.க.வின் இடத்தை வலுப்படுத்துவதையும், நீண்டகால அடிப்படையில் ஆட்சியைப் பிடிப்பதற்கான அடித்தளத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
