நாக சதுர்த்தி அன்று நாகர் சிலைகளுக்குப் பால், பழம் ஊற்றி வழிபடுவதை நாம் வழக்கமாகக் கொண்டு இருக்கிறோம். இதற்கு என்ன பலன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாமா…
நாக சதுர்த்தி இந்தியாவின் வட மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்றது.. அனைத்து சிவன் கோவில்களிலும் நாகங்களின் வடிவங்களை நாம் காண முடியும். இந்த ஆண்டு நாக சதுர்த்தி ஜூலை 28 08ம் தேதி திங்கள்கிழமை வருகிறது. இந்த நாளில் நாகங்களுக்கு பால், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டி வழிபடுவது மிகவும் அவசியம். இதனால் குடும்பம் சுபிட்சம் அடையும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள், பயங்கள் போன்றவை நீங்கி, சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும்.
நாக சதுர்த்தி என்பது நாக தோஷம், நாகங்களின் சாபம், ஷர்ப்பதோஷம், கால ஷர்ப்ப தோஷம் போன்ற கடுமையான தோஷங்களையும், ஜாதகத்தில் ராகு-கேதுவால் ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றை நீக்கக் கூடிய மிக உன்னதமான நாளாகும். இந்த நாளில் அனைவரும் கண்டிப்பாக நாக வழிபாடு செய்வது சிறப்பானதாகும். நாக சதுர்த்தி அன்று செய்யப்படும் நாகர் வழிபாடு, உலகத்தில் உள்ள அனைத்து நாகங்களையும் திருப்தியும், சாந்தியும் படுத்தக் கூடியதாகும்.
ஜாதகத்தில் நாகங்களின் தோஷமோ, சாபமோ இருந்தால் திருமணம், குழந்தைப் பேறு போன்றவற்றில் பிரச்சனைகளும், தடைகளும் இருக்கும். இப்படிப்பட்ட தடைகள் நீங்க நாக சதுர்த்தியில் நாகராஜரை வழிபடலாம். அன்றைய தினம் நாகராஜருக்குரிய 108 போற்றி மந்திரங்களை சொல்லி பூஜை செய்வதால், நாகங்களின் ஆசிகளை பெற முடியும்
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



