நாகேஷைப் போன்றே எழுத்தாளர் ஜெயகாந்தன் மீது மிகுந்த அன்பு கொண்டு இருந்த இன்னொரு நகைச்சுவை நடிகர் சந்திரபாபு. அந்தக் காலத்தில் உறங்காது போலும் என்றொரு கதையை எழுதி இருந்தார் ஜெயகாந்தன். அந்தக் கதையைப் பற்றிக் கேள்விப்பட்டதும் தனது நெருங்கிய நண்பர் சுந்தரத்திடம் எப்படியாவது ஜெயகாந்தனை வீட்டுக்கு அழைத்து வாருங்கள் என்றார் சந்திரபாபு. ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பராகவும் சுந்தரம் இருந்தார்.
அதனால் சந்திரபாபுவின் வீட்டுக்குக் காரில் அழைத்து வந்தார். வழக்கமாக ஒரு வீட்டிற்கு விருந்தாளி வந்தால் நம்மை வீட்டார் வரவேற்பர் என்றுதான் எதிர்பார்ப்பார்கள். ஆனால் ஜெயகாந்தன் சந்திரபாபுவின் வீட்டுக்குச் சென்றதும் அங்கு அவரை வரவேற்க யாருமே இல்லை. உடனே அங்குள்ள ஒரு சோபாவில் போய் உட்கார்ந்தார். 100 எண்ணுவோம். அதற்குள் யாரும் வரலன்னா நாம வீட்டை விட்டுப் போயிடுவோம்னு முடிவு எடுத்தார் ஜெயகாந்தன்.
அவர் எண்ணிக்கையில் 90ஐத் தாண்டுவதற்குள்ளாகவே சந்திரபாபு அங்கு வந்துவிட்டார். வந்ததும் இன்முகத்தோடு என்ன சாப்பிடுறீங்கன்னு கேட்டார். அப்போது ஜெயகாந்தன் என்னன்னு எதுவுமே சொல்லாம இருந்தார். மாறாக அப்படின்னான்னு கேட்டார். ஜெயகாந்தனின் பதிலுக்காகக் காத்திருக்காத சந்திரபாபு தனது வேலையாளை அழைத்து விஸ்கியை எடுத்து வரச் சொன்னார். இப்படித் தொடங்கிய சந்திரபாபுவின் நட்பு நல்ல துவக்கமாக இருந்தது.
ஜெயகாந்தன் அப்போது எழுதிய எனக்காக அழு என்ற நாடகத்தை மாற்றித் தரும்படி வேண்டுகோள் விடுத்தார் சந்திரபாபு. அவரது வேண்டுகோளை ஏற்று ஜெயகாந்தன் அந்தக் கதையை நாடகமாக எழுதி முடித்தார்.
ஜெயகாந்தன் அந்தக் கதையை எழுதி முடித்து விட்டு சந்திரபாபுவிடம் சொன்னபோது அவர் எனக்காக இப்போதெல்லாம் நாடகத்துல நடிக்கறதுக்கு இன்ட்ரஸ்ட் இல்ல என்று சொல்லி விட்டார். அதுதான் சந்திரபாபுவோட குணம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


