மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த சில ஆண்டுகளில் சரியான நேரத்தில் தூங்குதல், சரியான உணவு மற்றும் சரியான அளவில் தண்ணீர் அருந்துதல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றின் மூலம் தன்னுடைய உடல்நிலை மற்றும் வேலை திறன் அதிகரித்ததை கவனித்ததாக தெரிவித்துள்ளார்.
உலக கருப்பை நோய் தினத்தையொட்டி டெல்லியின் லிவர் மற்றும் பைலரி அறிவியல் நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் பேசும் போது, அவர் இளைஞர்கள் தினமும் இரண்டு மணி நேர உடற்பயிற்சி மற்றும் ஆறு மணி நேர தூக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:
“2019 மே மாதத்திலிருந்து இன்று வரை நான் மிகப் பெரிய மாற்றத்தை அடைந்துள்ளேன். தூக்கம், தூய நீர், நல்ல உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையில் பலவிதமான முன்னேற்றங்களை பெற்றுள்ளேன். கடந்த நான்கரை ஆண்டுகளில், நான் அனைத்து அலோபதி மருந்துகளிலிருந்தும் விடுபட்டுள்ளேன்,” என அவர் தன்னுடைய உடல்நலப் பயணத்தையும், நீண்ட கால சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்திய அனுபவத்தையும் பகிர்ந்தார்.
அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் தங்களின் உடலுக்காக இரண்டு மணி நேர உடற்பயிற்சி மற்றும் மூளைக்காக ஆறு மணி நேர தூக்கத்தை ஒதுக்க வேண்டும் என்றும், இது மிகுந்த பயனளிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் “இது என் சொந்த அனுபவம்,” எனவும் அவர் கூறினார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
