அஜித், த்ரிஷா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி தமிழ் புத்தாண்டு சிறப்பு விருந்தாக திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்குத் திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
அதே நேரத்தில், சூர்யா, பூஜா ஹெக்டேநடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானபோது நல்ல வரவேற்பு பெற்றது. டீசரில் இருந்து வெளிவந்த தகவலின்படி, கதைக்களம் பின்வருமாறு:
ஒரு கேங்ஸ்டர் கதாநாயகி மீது காதலாகி, அனைத்தையும் விட்டு சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப முயல்கிறார். ஆனால், அவரது கடந்த காலம் மற்றும் கேங்ஸ்டர் குழுவினரின் தொடர்பு தொடர்ந்துகொண்டே இருக்க, அவர் எவ்வாறு சமாளித்து நிம்மதியான வாழ்க்கைக்கு திரும்புகிறார் என்பது தான் கதை.
இந்நிலையில், அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் கதையும் லீக் ஆகியதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதைபடி, ஒரு அஞ்சாத டான் திடீரென மனது மாறி தனது குடும்பத்துடன் அமைதியாக வாழ விரும்புகிறார். ஆனால், அவர் செய்த கடந்த கால செயல்கள் அவரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதனால், டான் தொழிலை விட்டுவிட்டு, தனது குடும்பத்துடன் நிம்மதியாக வாழ அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளே படத்தின் கதை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த இரண்டு கதைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ‘குட் பேட் அக்லி’ முதலில் வெளியாவதால், பின்னர் வெளியாகும் ‘ரெட்ரோ’ ரசிகர்களிடையே எந்தளவு வரவேற்பைப் பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.