நடிகர் சிவகார்த்திகேயன் டிவியில் ஆங்கராக இருந்து படிப்படியாகத் தன் திறமையை வளர்த்து திரையுலகில் முன்னுக்கு வந்தார். ஆரம்பகாலகட்டத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் காமெடியுடன் வந்து அவருடைய வளர்ச்சிக்கு வித்திட்டது.
தொடர்ந்து அவரது படங்களில் இருந்த காமெடியுடன் கலந்த மசாலா படங்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்க வைத்தது, ரஜினி முருகன், காக்கி சட்டை, சீமராஜா போன்ற படங்கள் இந்த வரிசையில் வந்தன.
அமரன்: அதைத் தொடர்ந்து டான், டாக்டர் படங்கள் அவரை முன்னனி நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தின. கடைசியாக வெளிவந்த அமரன் படம் அவருக்கு மிகப்பெரிய மார்க்கெட்டைக் கொடுத்தது. அந்த வகையில் இவருக்கு இந்தப் படம் கணிசமாக சம்பளம் உயரவும் காரணமாக அமைந்தது.
பராசக்தி: தொடர்ந்து தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.இந்தப் படம் சிவாஜி நடித்த முதல் படம் என்பதாலும் மிகப் பெரிய ஹிட்டான படம் என்பதாலும் இப்போது சர்ச்சையாகி உள்ளது. இந்தப் படத்தின் டைட்டிலை அந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான நேஷனல் பிக்சர்ஸ் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்துள்ளது.
படித்த பள்ளி: இந்நிலையில், திருச்சியில் தான் படித்த பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக சென்றார் எஸ்.கே. அப்போது அவர் கூறிய விஷயம் நெகிழ்ச்சியாக இருந்தது. இங்கு சீட் கிடைப்பது ரொம்ப கஷ்டம். எனக்கு கணக்கு சரியாக வராது. சுமாராகத் தான் அந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதி இருந்தேன்.
சிறப்பு விருந்தினர்: அப்பா என்னிடம், நான் யார்கிட்டயும் ரிக்வெஸ்ட் பண்ணி எதையும் கேட்டது இல்லை. உனக்காக ஒரு மணி நேரம் ஸ்கூலில் நின்று கேட்டு சீட்டு வாங்கி இருக்கிறேன். தயவு செய்து நல்லா படி என்று சொன்னார். நமக்காக அப்பாவை ஒரு மணி நேரம் நிக்க வைத்துவிட்டோமே என்று ரொம்ப வருத்தப்பட்டேன். இப்போ அதே ஸ்கூலில் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறேன் என்றார் சிவகார்த்திகேயன்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.

