பிக் பாஸ் வீட்டில் கடந்த இரண்டு தினங்களாக மிகப்பெரிய அளவில் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்த சம்பவம் என்றால் முத்துக்குமரன் மற்றும் பவித்ரா கேப்டன்சி டாஸ்க் பற்றியது தான். ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டில் கேப்டன்கள் மாற்றப்பட்டு வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வரும் நிலையில் இந்த வாரமும் அடுத்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது.
இதில் பவித்ரா வெற்றி பெற்றிருந்தாலும் அவருக்கு எதிராக ஆடிய முத்து, வேண்டுமென்றே அவரை வெற்றி பெற செய்தது போல இருந்தது. மேலும் பவித்ரா கேப்டனாக வேண்டுமென்ற நினைப்பில் அப்படி செய்தாரா அல்லது வேண்டுமென்றே விட்டுக் கொடுத்தால் பிக் பாஸ் கேப்டனே வேண்டாம் என சொல்லிவிட வாய்ப்பு உருவாகும் என்பதை அறிந்து அப்படி செய்தாரா என்பது தெரியவில்லை.
முத்துவுக்கு என்ன தான் ஆச்சு?
500 பேர் இந்த நிகழ்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருப்பதாகவும் உங்களுக்காக வேண்டும் என்றே விளையாட வேண்டாம் என பலமுறை எச்சரித்தும் நீங்கள் யாரும் கேட்கவில்லை என்றும் கோபத்தில் பிக் பாஸ் கூறியதுடன் மட்டுமில்லாமல் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் மற்றும் கேப்டன்சி டாஸ்க் என இரண்டையும் ரத்து செய்திருந்தார். தான் வேண்டுமென்றே விட்டுக் கொடுத்ததாக நினைத்து பிக்பாஸ் இந்த முடிவை எடுத்ததால் உடனடியாக கண்ணீர் வடிக்க தொடங்கிய முத்து, வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் அது போட்டியின் சூழலில் நடந்தது தான் என்றும் விளக்கம் கொடுத்திருந்தார்.
ஆனாலும் பிக் பாஸ் அதனை ஏற்றுக் கொள்ளாமல் எந்த பதிலும் தெரிவிக்காமல் இருக்க தொடர்ந்து முத்துவும், பவித்ராவும் அழுது கொண்டே இருந்ததாக தெரிகிறது. முத்துவின் செயலால் கேப்டன்சி டாஸ்க் மற்றும் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் என அனைத்தும் ரத்தானதால் அந்த வீட்டில் இருந்த அனைவருக்குமே அது மிகப்பெரிய பாதிப்பு தான்.
முட்டு கொடுத்த மஞ்சரி
இது முத்துவிற்கு இன்னும் மன உளைச்சலை கொடுக்க இந்த சம்பவம் தொடர்பாக அனைவருமே பேசிக் கொண்டிருக்கின்றனர். பார்வையாளர்கள் பலரும் முத்து பொய் கூறுகிறார் என்றும் வேண்டுமென்றே தான் அவர் செய்தார் என்றும் பவித்ராவின் கேப்டன்சி பதவியை இல்லாமல் செய்வதற்காக இப்படி நாடகம் போடுகிறார் என்றும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது. அந்த வீடியோவை சாதாரணமாக பார்ப்பவர்களுக்கே இது முத்து வேண்டுமென்றே செய்தார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இதனை நேரடியாக பார்த்த மஞ்சரி, ‘எனக்கு இருக்கிற ஒரே ஆறுதல், நீ அதை வேண்டுமென்றே செய்யவில்லை என்பது தான்’ என தெரிவித்து ஆறுதலும் அடைகிறார். முத்து வேண்டும் என்றே செய்தது போல தெரிந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் மஞ்சரி அவர் செய்தது நியாயம் என பேசுவதை ரசிகர்கள் அதிகமாக விமர்சித்து வருகின்றனர்.