கார்த்திகை மாதம் வரும் பரணி தீபம் அன்று எப்படி வழிபடணும்? எப்படி ஏத்துவது என பார்ப்போமா…
தீபத்திருநாள் கார்த்திகை மாதத்தில் வரும் அருமையான விரதநாள். இந்த நாளை நாம் 3 நாள்கள் கொண்டாட வேண்டும். முதல் நாளாக வருவது பரணி தீபம். 2வது நாள் கார்த்திகை தீபம். 3வது நாள் பாஞ்சராத்ர தீபம். இந்த பரணி தீபம் என்பது எதற்காக என்று பார்ப்போம்.
கடோபநிஷதம்
கடோபநிஷதம் என்ற நூலில் பரணிதீபம் பற்றி பேசப்பட்டுள்ளது. நசிகேதனின் தந்தை ஒரு வேள்வி செய்கிறார். அவர் தேவர்கள் கேட்பதை எல்லாம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அப்போது எல்லாருக்கும் இப்படியே கொடுத்துக்கிட்டு இருக்கீங்களே… என்னையும் கூட கொடுத்துருவீங்களான்னு அவரது மகன் கேட்கிறான். ஆமாம். உன்னையும் தான் கொடுக்கப் போகிறேன் என்கிறார் நசிகேதன். யாருக்கு என கேட்கவும் எமனுக்கு என்கிறார்.
அவர் நேராக எமதர்மராஜனிடம் சென்று கேள்வியாகக் கேட்கிறார். கீழேயும் துன்பம். மேலேயும் துன்பம். எங்க அப்பா அனுப்பினதுக்காக வந்துட்டேன். இதெல்லாம் நியாயமான்னு கேட்கிறார். அதற்கு எமன் விளக்கம் அளிக்கிறார். ஒவ்வொருவருடைய பாவங்களுக்கும் பலன்களை அனுபவிக்கிறார்கள் என்கிறார்.
எல்லாம் சரிதான். மனிதர்களுக்கு இது தவறு என்று தெரிந்து அதற்கு எதிர்வினை கிடைக்கும் என்று தெரிந்தால் ஏன் நல்ல விஷயங்களைக் கடைபிடிக்கவில்லை என எமன் கேட்கிறார். அப்போது நாங்க நல்லா வாழ்வதற்கு ஏதாவது வழி சொல்லுங்க என நசிகேதன் மகன் கேட்கவும் எமனும் பல விஷயங்களையும் சொல்கிறார்.
பரணி
அதில் ஒன்று தான் இது. கார்த்திகை மாதம் வரும் பரணி நட்சத்திரத்தன்று தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அப்படி யார் செய்தாலும் அவர்களுக்கும், அவர்களது எதிர்கால சந்ததியினருக்கும், முன்னோர்களுக்கும் மேல் உலகத்தில் உண்டான நலன்கள் கிடைக்கும் என்கிறார்.
அதைக் கேட்டதும் அந்த சிறுவன் எனக்கு அனுமதி கொடுங்க. நான் பூலோகத்துல போய் அதை எல்லாம் செய்கிறேன்னு சொல்கிறார். அதை எல்லாம் நான் மக்களுக்கு சொல்கிறேன் என்கிறார். அதற்கு எமனும் அனுமதி அளிக்கிறார். பூலோகம் வந்து அவர் சொன்னதும்தான் மக்களுக்கும் தெரிகிறது.
அறியா பாவம்
இந்த பரணி தீபம் அறியாமல் செய்யக்கூடிய பாவங்களில் இருந்து நமக்கு விடுதலையைப் பெற்றுத் தரும். நாம் நடந்து போகும்போது கால் பட்டு பூச்சியோ, எறும்போ செத்துப் போய் இருக்கும். அது நாம் தெரிந்து செய்யவில்லை.
அந்தப் பாவமும் விலகும். அதே போல சாதாரணமா பேசும் விஷயம் பிறர் மனதைப் புண்படுத்தி இருந்தால் அதுவும் பாவம்தான். அதுவும் விலகும். நமது முன்னோர்களை நினைத்து நாம் செய்ய வேண்டிய ஒரு கடமை தான் இது. கடமை என்பது நடக்குதோ, நடக்கலையோ ஆனால் செய்ய வேண்டும்.
அதனால் இந்த நாளில் தீபம் ஏற்றினால் முன்னோர்களுக்கும், நமக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் நலம் பயக்கும். இது பஞ்சபூதங்களின் தத்துவத்தை நமக்கு தருகிறது. அதற்கான பலன்களை நாம் இந்தத் தீபம் ஏற்றும்போது உதவுகிறது.
எமனுக்குப் பிரியமான நட்சத்திரத்தில் ஒன்றுதான் இந்த பரணி. அமாவாசைக்குப் பிறகு நாம் வழிபாடு செய்ய இன்னொரு மகததான நாள் தான் இந்த பரணி. கார்த்திகை மாதம் தேவர்களுக்கு விடிவதற்கு முன்னால் இருக்கும் காலம்.
வெளிச்சமான நிலை
அதனால் அது இருளாக இருக்கிற இந்தக்காலத்தில் நாம் வழிபாடு செய்தால் வெளிச்சமான நிலை நமக்கும், நம் முன்னோர்களுக்கும் கிடைக்கும். இந்த ஆண்டு 12.12.2024 காலை 8.20 மணிக்கு ஆரம்பிக்கும் பரணி நட்சத்திரம் 13.12.2024 காலை 6.50 மணி வரை உள்ளது. அதனால் 12ம் தேதி மாலை 6 மணிக்கு பரணி தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த தீபத்தை வீடு முழுவதும் ஏற்றி வைக்கலாம். கார்த்திகைத் தினத்தன்று ஏற்றுவது போலவே ஏற்றலாம். குறைந்தபட்சம் 5 தீபங்கள் ஏற்ற வேண்டும். அதை வட்டவடிவில் ஏற்றுவது சிறப்பு.
தாமரை கோலம் போட்டு அதில் 5 அகல் விளக்கு பஞ்சு திரி, நெய் தீபம் ஏற்றலாம். இந்த பரணி தீபத்தைத் தனியாகவே ஏற்ற வேண்டும். முதலில் நிலை வாசலில் தான் விளக்கு ஏற்ற வேண்டும். பரணி அன்று மதியத்துடன் உணவை நிறுத்திக் கொள்ளலாம்.
இரவில் எளிமையாக பால், பழம் எடுத்துக் கொண்டு விரதத்தைத் தொடங்கி மறுநாளும் எடுத்துக் கொள்ளலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.