கந்த சஷ்டி 3வது நாள்: எறும்பு தானம்னா என்ன? எப்படி செய்வது? என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

By Sankar Velu

Published:

கந்த சஷ்டியோட 3வது நாள் நமக்கு 4.11.2024 வருகிறது. இன்று (திங்கள்கிழமை) சற்கோண தீபத்தில் ‘வ’ என்ற எழுத்தில் இருந்து விளக்கை வைக்க வேண்டும். 3தீபங்களை ஏற்ற வேண்டும். காலை, மாலை ஏற்ற வேண்டும்.

தினமும் கோலத்தைப் புதுசாகத் தான் போட வேண்டும். அதில் மஞ்சள், குங்குமம் வைத்துவிட்டு விளக்கு ஏற்ற வேண்டும். 3ம் நாளில் எலுமிச்சை சாதம் நைவேத்தியமாக செய்யலாம். இந்த நாளில் எறும்புப் புற்றுக்கு நொய் அரிசி கொண்டு போடுங்க. ஆயிரக்கணக்கான பேருக்கு எல்லாரும் அன்னதானம் செய்ய முடியாது.

அவங்க எறும்புப் புற்றுக்குப் போடலாம். பச்சரிசியை மாவாகவோ, கரகரன்னு மிக்சில அரைச்சி எடுத்தாலும் சரி. அதை எறும்புப் புற்றுல கொண்டு போய் போடலாம். இதன்பலன் நமக்கு செல்வம் பெருகும். அன்னதானம் தான் நம் கருமவினைகளைக் குறைக்கும். அப்படி செய்ய செய்ய நமக்கு செல்வங்கள் பெருகும். இறைக்க இறைக்க கிணறு ஊறுவது போல கொடுக்க கொடுக்க செல்வம் பெருகும்.

காசு இருந்தா மட்டும் போதாது. அதை நல்ல வழியில் செலவழிக்கிற வழியையும் கடவுள் தான் கொடுக்கணும். செல்வத்தின் பலன் என்ன என்றால் அனுபவிக்கும்படியாக, பிறருக்கு பயன்படும் வகையில் செலவு செய்யக்கூடிய அருள் வேண்டும். இது முருகப்பெருமானை வழிபடுவதால் நமக்குக் கிடைக்கும்.

erumbu thanam
erumbu thanam

கொஞ்சமா கைப்பிடி அளவுக்கு அரிசியைக் கொண்டு போய் எறும்புப் புற்றில் போட வேண்டும். எத்தனையோ எறும்புகளின் பசிப்பிணியைப் போக்கும். அந்த வாழ்த்து நமக்கு செல்வத்தைக் கொடுக்கும். முருகப்பெருமான் செல்வத்துக்கு அதிபதியான கடவுள்.
மகாலட்சுமியைத் தனது செல்வத்தை முருகப்பெருமானிடம் தான் கொடுத்துள்ளாராம். அத்தகைய அற்புதமான இடம் திருவாவினன்குடி.

வறுமை நீங்க அருணகிரிநாதர் பாடிய ‘திமிர புததி யனைய நரக’ என்ற திருப்புகழைப் பாராயணம் செய்யலாம். அடுத்ததாக செல்வம் தரும் நாலு வரி பதிகமான ‘உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய், மலராய், மணியாய், ஒளியாய்க், கருவாய், உயிராய்க், கதியாய், விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே’ என்ற பாடலையும் பாராயணம் செய்து நாம் செல்வ வளத்தைப் பெறலாம்.

வறுமை என்ற நோய் நீங்கினால் நம் முகம் தெளிவு பெறும். நம் வாழ்க்கை வளமாக இருக்கும். அதனால் முருகப்பெருமானை மனதார வேண்டி வழிபடுங்கள். இன்று (4.11.2024) காலை 6 மணி முதல் 7.20 மணிக்குள் வழிபடலாம். தானம் காலை 11 மணி முதல் 12 மணிக்குள் செய்ய வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் சாமி கும்பிடலாம். தானமும் செய்யலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.