பிக் பாஸ் 8: அப்பவே நான் ஜெயிச்சுட்டேன்.. கூட இருந்தே ஏமாற்றிய ஆண்கள்.. ஒரே ஒரு பெண் போட்டியாளரால் துள்ளிக் குதித்த ரவீந்தர்..

By Ajith V

Published:

ந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை மொத்தமுள்ள 18 போட்டியார்களும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். டாஸ்கே இந்த வீட்டில் கொடுக்கப்படவில்லை என்றாலும் கூட அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுவதால் நிச்சயம் பல சண்டைகளும், வாக்குவாதங்களும் நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

முதல் ஒரு சில நாட்கள் சற்று அமைதியாக இருந்தாலும் அதன் பின்னர் போட்டியாளர்கள் மாறி மாறி கருத்துக்களை தெரிவிக்கத் தொடங்கி விட்டனர். பெண்கள் அணியில் இருந்து ஒருவர் ஆண்கள் அணிக்கும், ஆண்கள் அணியில் இருந்து ஒருவர் பெண்கள் அணிக்கும் போக வேண்டும் என பிக் பாஸ் அறிவித்திருந்தது. இதற்கான முடிவை ஆண்கள் அணி மிகச் சிறப்பாக எடுக்க, பெண்கள் அணியிலோ பவித்ரா மற்றும் ஜாக்குலின் ஆகிய இருவருக்கும் வாய்த் தகராறு நடந்திருந்தது.

இதற்கு மத்தியில் முதல் நாளின் முடிவிலேயே சாச்சனாவும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற சமீபத்தில் அவர் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இன்னொரு பக்கம் மற்ற போட்டியாளர்களை பற்றி மூன்றாவது நபரிடம் ஏதாவது புறணி பேசுவதை தவிர அதிகம் சண்டைகள் இல்லாமல் இருந்து வந்தது. அப்படி ஒரு சூழல் தான் புதிதாக வந்த ஒரு டாஸ்க்கால் பேட்மேன் ரவீந்தர் கடும் விரக்திக்கும் ஆளாகி உள்ளார் என்றே தெரிகிறது.

சமீபத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் போட்டியாளர்கள் அனைவரும் Real யார் என்பதையும், Fake யார் என்பதையும் அறிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விஷால், அருண் உள்ளிட்ட பலர் ரவீந்தரை Fake என குறிப்பிட்டிருந்தனர். அவர் கேம் தெரிந்தது போல நடிப்பதாகவும் வெளியே ஒன்றும் உள்ளே ஒன்றும் வைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் காரணங்களையும் நிறைய அடுக்கியிருந்தனர்.

ரவீந்தருக்கு 4 பேர் Fake என்ற ஸ்டிக்கரை ஒட்டி இருந்த நிலையில் ஒருவர் கூட அவரை ரியல் என்று குறிப்பிடவில்லை. இந்த டாஸ்க் முடிந்த பின்னர் இது பற்றி பேசி இருந்த ரவீந்தர், தான் ஒரு அணியாக கருதும் ஆண்கள் டீமில் இருந்து தான் நான்கு பேர் தன்னை Fake என தேர்வு செய்ததாகவும், போட்டியாளராக அவர்களை எதிர்த்து ஆடும் பெண்கள் அணியில் இருந்து ஒருவர் கூட எனக்கு ஃபேக் ஸ்டிக்கர் தராமல் போனது பெரிய விஷயம் என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

இதே போல, 4 நாட்கள் வெளியே இருந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த சாச்சனாவை பற்றி பேசிய ரவீந்தர், “என் வெற்றி எங்க தெரியுமா நிர்ணயம் ஆச்சு. நான்கு நாள் வெளியே போட்டியை பார்த்து விட்டு வந்த சாச்சனா, Fake என என்னை சொல்லி இருந்தால் எனக்கு ஏறி இருக்கும். ஆனால், சாச்சனா என்னை Fake என சொல்லவில்லை” என்பதை மிக உற்சாகமாகவும் குறிப்பிடுகிறார்.

அதிகம் பேர் தன்னை Fake என கூறியதை ஒரு பொருட்டாகவே மதிக்காத ரவீந்தர், வெளியே கேமை பார்த்துவிட்டு தன்னை போலி என சாச்னா சொல்லாததை தனக்கு வெற்றி என பெருமையாக குறிப்பிட்டு வருகிறார்.