நாளை உதயநிதி துணை முதல்வராகிறார்.. தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

By Keerthana

Published:

சென்னை: தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் என்பது இப்போது நடக்க போகிறது.. அடுத்து நடக்க போகிறது.. என ஒவ்வொரு நாளும் செய்திகள் கடந்த ஒரு மாதமாக செய்திகள் வெளிவந்த நிலையில், ஒரு வழியாக உறுதியாகி உள்ளது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நாளை பொறுப்பேற்கிறார். அவருடன் செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் ஆகியோர் அமைச்சர்களாகிறார்கள். பொன்முடி முதல் தங்கம் தென்னரசு வரை 6 பேருக்கு துறைகள் மாறுகின்றன.

நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்துள்ளார். செந்தில் பாலாஜி அமைச்சராக எந்த தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. எனவே அமைச்சரவை மாற்றம் என்பது இப்போத உறுதியாகி உள்ளது. ஏனெனில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரைப்படி தமிழக அமைச்சரவை மாற்றப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.

ஞாயிறு (செப்டம்பர் 29) மாலை 3.30 மணிக்கு தமிழக அமைச்சரவை மாற்ற விழா நடக்கிறது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அதேபோல் 4 பேர் புதிதாக அமைச்சரவையில் இணைகிறார்கள்,

தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛‛தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த பொறுப்புடன் கூடுதல் இலாகாக்களுடன் துணை முதல்வராக உள்ளார். செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

இவர்கள் 4 பேரும் நாளை மாலை 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடக்கும் பதவியேற்பு விழாவில் புதிய பொறுப்பை ஏற்கிறார்கள். இவர்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார்கள். அதேநேரம் 4 பேருக்கும் எந்த இலாகாக்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம். ம் செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் நாளை அமைச்சராக சேர்க்கப்படும் நிலையில் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.