கலைஞர் கருணாநிதி எம்ஜிஆர் நடிப்பில் ராஜகுமாரி, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, அரசிளங்குமரி, மந்திரிகுமாரி, புதுமைப்பித்தன், நாம், காஞ்சித்தலைவன், எங்கள் தங்கம் ஆகிய 9 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
இதில் ராஜகுமாரி படத்தில் உதவி வசனகர்த்தா என்று கலைஞரின் பெயர் இடம்பெற்றிருந்தது. அபிமன்யு படத்தைப் பொருத்தவரைக்கும் அந்தப் படத்தின் முழு வசனகர்த்தா கலைஞர் தான் என்ற போதிலும் அந்தப் படத்தோட டைட்டிலில் அவரோட பேரு இடம்பெறவே இல்லை.
கலைஞரோட திரைக்கதையில் எம்ஜிஆர் நடித்த படம்னா அது எங்கள் தங்கம் தான். அதுதான் எம்ஜிஆரும், கலைஞரும் இணைந்து பணியாற்றிய கடைசி படமாக அமைந்தது.
இன்னொரு விஷயமும் இந்தப் படத்தைப் பற்றிச் சொல்றாங்க. எம்ஜிஆர், கருணாநிதியின் கடனை அடைப்பதற்காக இலவசமாக நடித்துக் கொடுத்த படம் தான் எங்கள் தங்கம். இதே படத்தில் நடித்த எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சம்பளமே வாங்காமல் நடித்தார்களாம்.
1970ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் கிருஷ்ணன் பஞ்சு. முரசொலி மாறன் தயாரித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன், ஏவிஎம்.ராஜன், புஷ்பலதா, அசோகன், சோ, தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர்
எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். ஒரு நாள் கூத்துக்கு, டோன்ட் டச் மீ, தங்கப்பதக்கத்தின் மேலே, நான் அளவோடு ரசிப்பவன், நான் செத்துப் பொழச்சவன்டா ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் இந்தப் படத்தில் தான் உள்ளன.
ராஜகுமாரி 1947ல் வெளியானது. ஏஎஸ்ஏ.சாமி இயக்கினார். எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த முதல் படம். கலைஞர் வசனகர்த்தா. இவருக்கும் இதுதான் முதல் படம்.
அதே போல இயக்குனர் ஏஎஸ்ஏ.சாமிக்கும் இதுதான் முதல் படம். அபிமன்யு 1948ல் வெளியானது. சோமசுந்தரம், காசிலிங்கம் இணைந்து இயக்கினர். இந்தப் படத்திற்கு உதவி வசனகர்த்தா கருணாநிதி. படத்தில் எஸ்.எம்.குமரேசன் தான் ஹீரோ.
அவர் தான் அபிமன்யு. எம்ஜிஆர் அர்ஜூனன் கேரக்டரில் வருகிறார். நம்பியார் லட்சுமணன் கேரக்டரில் வருகிறார். 1950ல் மருதநாட்டு இளவரசி ரிலீஸ். ஏ.காசிலிங்கம் இயக்கினார். கருணாநிதி வசனகர்த்தா. 1957ல் புதுமைப்பித்தன் டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளியானது.
1953ல் காசிலிங்கம் இயக்கத்தில் வெளியான படம் நாம். 1963ல் காசிலிங்கம் இயக்கிய படம் காஞ்சித்தலைவன். எஸ்எஸ்ஆர், விஜயகுமாரி, பானுமதி உள்பட பலர் நடித்துள்ளனர். கருணாநிதி கதை, வசனம் எழுதியுள்ளார்.