ஷார்ட் டேர்ம் சக்சஸ் ஏமாற்று வேலை .. பங்குச்சந்தை மோசடியாளர்கள் ஜாக்கிரதை..!

By Bala Siva

Published:

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது நீண்ட காலத்திற்கு மட்டுமே நல்ல பலன் தரும் என்றும் ஷார்ட் டேர்ம் முதலீடு என்பது பெரும்பாலும் நஷ்டம் தான் ஏற்படும் என்றும் பங்குச் சந்தை நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பங்குச்சந்தை ஆலோசனை கூறுவதாக சில மோசடியாளர்கள் ஷார்ட் டேர்ம் மூலம்  விரைவில் பணக்காரர் ஆகிவிடலாம் என்றும் மூன்றே நாட்களில் 20% லாபம் கிடைக்கும் என்றும் கூறி மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

போன் மூலமாக, வாட்ஸ் அப் மூலமோ ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால் மூன்றே நாட்களில் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டி முதலீடு செய்ய வைக்கிறார்கள் என்றும் இவ்வாறு செய்யப்படும் முதலீடு பெரும்பாலும் நஷ்டத்தை தான் சந்திக்கும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதையும் மீறி நீண்ட காலம் பொறுமையாக இருக்க முடியாத சில முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் பணக்காரராக வேண்டும் என்ற பேராசை காரணமாக ஷார்ட் டேர்ம் முதலீடு செய்வதாகவும் அதன் பின்னர் தங்கள் பணத்தை இழந்து நிற்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

பங்கு சந்தையில் தினசரி டிரேடிங் செய்பவர்கள் ஜெயித்ததாக சரித்திரமே இல்லை என்றும் நீண்ட கால முதலீட்டில் பொறுமையாக இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்றும் இது ஒரு சூதாட்டம் அல்ல, ஒரு சேமிப்பு என்பதை முதலீட்டாளர்கள் மனதில் கொள்ள வேண்டும் என்றும் முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர்.