உலகநாயகனின் அந்த 55 நாட்கள்.. மனுஷன் எவ்வளவு டெடிகேஷன் தெரியுமா?

Published:

நடிகர் கமல்ஹாசன் உலக நாயகன் என்ற பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர். தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களில் இருக்கும் மெனக்கெடல் ஒவ்வொரு நடிகருக்கும் பாடமாக அமைகிறது. சினிமா கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் கமல்ஹாசனின் படங்களைப் பார்த்தாலே போதும்.

அதில் சொல்லப்படாத சினிமா பாடங்களே கிடையாது. பூஜை முதல் ரிலீஸ் வரை தனது படங்களில் எவ்வளவு புதுமைகளைப் புகுத்த முடியுமோ அதனை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது கமல்ஹாசன் படங்களே. இதனால் தான் அவரை உலக நாயகன் எனப் போற்றுகிறோம்.

மேலும் வித்தியாசன கெட்டப் என்றாலே இப்போது சீயான் விக்ரம் போல் 80, 90, 2000 ஆண்டுகளைக் கலக்கியவர் கமல்ஹாசன். அபூர்வ சகோதரர்கள் குள்ளமான கமல், புன்னகை மன்னன் சார்லி சாப்ளின், இந்தியன் தாத்தா என ஏகப்பட்ட படங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் சினிமாவில் அவர் பேசாத தமிழ் வட்டார வழக்கு மொழிப் படங்களே கிடையாது.

மதுரைத் தமிழுக்கு தேவர் மகன், விருமாண்டி, நெல்லைத் தமிழுக்கு பாபநாசம், கோவைத் தமிழுக்கு சதிலீலாவதி, சென்னைத் தமிழுக்கு காதலா காதலா, அபூர்வ சகோதரர்கள், இலங்கைத் தமிழுக்கு தெனாலி, ஐயங்கார் தமிழுக்கு மைக்கேல் மதன காமராசன், அவ்வை சண்முகி என படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இப்படி ஒவ்வொரு படங்களிலும் தன்னை செதுக்கிய கலைஞன் 1996-ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த அவ்வை சண்முகி படத்தில் ஐயங்கார் வீட்டு மாமியாக பெண் வேடமிட்டு நடிப்பில் கலக்கியிருப்பார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் கமல் நடிக்கும் போது இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளராக இருந்தவர் ரமேஷ் கண்ணா.

ராஜகுமாரனை தேவயாணி காதலிக்க இது தான் காரணமாம்… என்ன ஒரு அழகிய காதல்!

இந்தப் படத்தின் ஷுட்டிங் அனுபவங்களை ரமேஷ் கண்ணா கூறும் போது, “அவ்வை சண்முகி படத்திற்காக கமல்ஹாசன் காலை 4 மணிக்கெல்லாம் தயாராக வேண்டும். ஏனெனில் படத்தில் வரும் மாமி கதாபாத்திரத்திற்காக பெண் வேடம் போட தினமும் ஷேவ் செய்ய வேண்டும். காலை 4 மணிக்கு மேக்கப் போட ஆரம்பித்தால் 9 மணிக்குத் தான் முடியும். அதனால் நாங்கள் அதிகாலையிலேயே டிபன் சாப்பிட்டு விடுவோம்.

மேக்கப் போட்டபின் அவரால் சரியாகச் சாப்பிட முடியாது என்பதால் அவரும் அதிகாலையிலேயே சாப்பிட்டு விடுவார். அதன்பின் பிற்பகல் 3 மணி வரை வெறும் ஜுஸ் மட்டும் தான். இப்படி தொடர்ச்சியாக 55 நாட்கள் கமல்ஹாசன் அவ்வை சண்முகி படத்திற்காக உழைத்தார். அவரின் டெடிகேஷன் தான் அவரை உலகநாயகனாக்கி இருக்கிறது” எனக் கூறினார்.

மேலும் உங்களுக்காக...