தளபதி விஜயின் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள படம் கோட். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படம் 3 மணி நேரம் என்றாலும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. அதுவே படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், விஜயகாந்த், மோகன் உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் பல்வேறு தரப்பு ரசிகர்களும் திரையரங்கிற்குப் படையெடுத்து வருகின்றனர்.
இந்தப் படத்தில் ஆங்காங்கே அஜீத்தின் பாடல்களும் வசனங்களும் வருவதால் அஜீத் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்திற்கு வலைதளங்களில் பல்வேறு வகையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. படத்தின் கதையை சொன்னால் படம் பார்க்கும் ஆர்வம் இருக்காது என்பதற்காகவே இங்கு சொல்லவில்லை.
நாம் ஒரு படத்துக்கு 200 ரூபாய் வரை செலவு செய்து தியேட்டருக்குப் படம் பார்க்கப் போகிறோம். அதன் சுவாரசியம் கேட்டு படத்துக்குப் போனால் பார்க்கும்போது அந்தளவு ஆர்வம் வராது. இதற்கு அடுத்த காட்சி இப்படித்தான் என்று தெரிந்து விடும்.
அதனால் படத்தைத் திரையரங்கிற்குச் சென்று காண வேண்டும். அப்போது தான் படத்தின் அத்தனை சுவாரசியங்களையும் உணர முடியும். அது மட்டுமல்லாமல் படத்தின் ஒளிப்பதிவு, இசையை திரையரங்கிற்குச் சென்று கண்டுகளித்தால் தான் அதன் முழு பலனையும் அனுபவிக்க முடியும்.

கோட் படத்தில் தன்னை மிகவும் கவர்ந்த காட்சி இது தான் என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. அவருக்கே பிடித்த அளவு அது எந்த சீனாக இருக்கும் என்று கேட்டால் இப்படி சொல்கிறார்.
கோட் படத்திலேயே உங்களுக்குப் பிடிச்ச காட்சி எதுன்னு வலைப்பேச்சுல இருந்து படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கிட்ட கேட்டாங்க. அதற்கு அவர் சொன்ன பதில் தான் ஹைலைட்டாக இருந்தது.
ப்ரீகிளைமாக்ஸ்சுக்கு முன்னாடி ஒரு சீன் வரும். அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சது. அதுல கூட ஒரு ஹைப்போடத் தான பேசியிருக்காங்க. அதுல தான் இருக்கு டுவிஸ்ட்.
எல்லாரும் தான் கதை சொல்லி விட்டார்களே இதுல என்ன ஒரு ஹைப் என்று கேட்கலாம். இந்தப் படத்துல வழக்கமா இதுவரை நாம ரெண்டு விஜய் தான் இருக்காரு நினைச்சிருப்போம். ஆனால் படத்துல மூணு விஜய். அதிலும் அந்தக் குட்டி விஜய் வர்ற சீன் தெறிக்க விடுகிறது. படத்தில் விஜய் நெகடிவ் ஷேடில் நடித்துள்ளார். விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் கெட்டப்பில் வருகிறார்.
ஆனாலும் சிஜியில் அவர் நடையைப் பார்க்கும்போது விஜய் நடக்குற மாதிரி தான் இருக்கு. பாடி லாங்குவேஜ்ல அந்தளவு வேலை செய்யவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது என்கின்றனர் சில சினிமா விமர்சகர்கள்.
படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில் இனி எவ்வளவு கோடிகளை லபக்குகிறது என்பதைத் தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


