மோகன்லால் மீது போடப்பட்ட வீண் பழி! விஸ்வரூபம் எடுத்த நடிகை

By Chandra R

Published:

ஒட்டுமொத்த மலையாள சினிமாவும் இப்போது ஹேமா கமிட்டியிடம் மாட்டிக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த சில வருடங்களுக்கு முன்பே அறிக்கையை தாக்கல் செய்த ஹேமா கமிட்டி அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நடிகர்களின் பெயர்களை வெளியிடாமல் இருந்தது கேரளா அரசு.

அது எப்படியோ லீக் ஆகி ஒவ்வொருவரின் பெயரும் இப்போது வெளியாகி கொண்டு வருகின்றது. பாலியல் புகாரில் மலையாள சினிமாவில் இருக்கும் பல முக்கிய நடிகர்கள் சிக்கியுள்ளதாக சமீபகாலமாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஹேமா கமிட்டி மீது ஒரு முழு நம்பிக்கை வைத்து பல நடிகைகள் நடிகர்களின் மீது புகார்களை கொடுத்துக் கொண்டே வருகின்றனர்.

இந்த நடிகர்களின் பெயரில் முதல் இடத்தில் இருப்பவர் மோகன்லால் என்றும் சொல்லப்படுகிறது. அவருடைய பெயர் தான் அடிக்கடி அடிபட்டு கொண்டே வருகின்றது. இதைப் பற்றி பிரபல நடிகை ஷர்மிளா ஒரு பேட்டியில் கூறும்போது மோகன்லால் பெயர் வருவதற்கு வாய்ப்பே இல்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை எனக் கூறியிருக்கிறார்.

இது ஒரு பெரிய பூகம்பத்தையே கிளப்பி இருக்கிறது. ஏனெனில் இதுவரை பல நடிகைகள் மோகன்லாலை குறிப்பிட்டு பேசி வந்த நிலையில் ஷர்மிளா மட்டும் அவர் அப்படிப்பட்டவர் இல்லை என கூறுவது அனைவரையும் ஆச்சரியமாக பார்க்க வைத்திருக்கிறது. ஏனெனில் இப்போது அந்த புகாரியில் சிக்கி உள்ள நடிகர்கள் அனைவருடனும் ஷர்மிளா நடித்திருக்கிறாராம்.

ஆனால் அவர் நடிக்கும் போது இந்த மாதிரி எந்த ஒரு சம்பவமும் தனக்கு நடக்கவில்லை எனக் கூறியிருக்கிறார். அதிலும் நான் முதன் முதலில் மலையாளத்தில் நடிக்கும் போது எனக்கு மலையாளமே தெரியாது. அதனால் மோகன்லால் மற்றும் இரு நடிகர்கள் என் அருகில் வந்து எங்களுக்கு தமிழ் தெரியும். அதனால் நீ கவலைப்படாதே. நாங்கள் உன்னிடம் தமிழிலேயே பேசுகிறோம் என ஷர்மிளாவுக்கு ஆதரவாக இருப்பாராம் மோகன்லால்.

அதே மாதிரி இன்னொரு படத்தில் நடிக்கும் போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடந்து கொண்டிருந்த சமயமாம். படப்பிடிப்பிற்கு வரும்போது ஷர்மிளா புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு வந்துவிடுவார். அப்போது மோகன்லால் வசனத்தை அப்புறம் படிக்கலாம். இப்போது தேர்வுக்கு முதலில் படி. நான் கேள்வி கேட்கிறேன். நீ பதில் சொல்ல வேண்டும்.

அதனால் முதலில் படி என இவர் அருகிலேயே உட்கார்ந்து படிக்க வைப்பாராம் மோகன்லால். இப்படிப்பட்டவர் இந்த மாதிரி புகாரில் சிக்கி இருக்கிறார் என்றால் என்னால் நம்பவே முடியவில்லை. அப்படிப்பட்டவரும் கிடையாது மோகன்லால் எனக் கூறியிருக்கிறார் ஷர்மிளா.

sarmia
sarmia

அதையும் மீறி அவர் ஒரு ஹீரோ. அழகானவர். எத்தனையோ ஹீரோயின்களுக்கு அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கலாம். அவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கலாம். அவருடன் நெருங்கி பழக வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கலாம். அவை எல்லாம் கிடைக்கவில்லை என்ற ஒரு ஆதங்கத்தினால் கூட மோகன்லால் மீது இப்படி ஒரு பழி வந்திருக்கலாம் என ஷர்மிளா கூறியிருக்கிறார்.

மேலும் உங்களுக்காக...