ஒரு வயதில் விட்டுட்டு போன இந்திய அப்பாவை 20 வருடம் கழித்து கண்டுபிடித்த ஜப்பான் மகன்.. எப்படி?

By: Keerthana

டோக்கியோ: ஜப்பானில் உள்ள ஒசாகா கலைப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 21 வயதான மாணவர் ரின் இந்தியர் ஒருவருக்குப் பிறந்தவர் ஆவார். அவர் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தந்தையை தேடி கண்டுபிடித்து இணைந்துள்ளார். கூகுளில் தேடி வந்த ரின், தனது தந்தையை பஞ்சாப் மாநில அமிர்தசரசில் வந்து கண்டுபிடித்துள்ளார்.

ஜப்பானிய தாய்க்கும் பஞ்சாபைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்த 21 வயதான ரின் தகாஹதா தனது தந்தையை தேடி வந்த பயணத்தை பற்றி பார்ப்போம். ரின் ஒரு வயது குழந்தையாக இருக்கும் போதே, அவரது தாய் தந்தை விவகாரத்து செய்துவிட்டனர். மனைவியிடம் இருந்து பிரிந்த பிறகு ரின் தகாஹதாவின் தந்தை சுக்பால் சிங் பஞ்சாப் மாநில அமிர்தசரசில் செட்டி ஆகிவிட்டார்.

இதனிடையே இப்போது 21 வயதை எட்டியிருக்கும் ரின் ஜப்பானில் உள்ள ஒசாகா கலைப் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். ஜப்பானில் உள்ள ஒசாகா கலைப் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக தனது ஃபேமலி ட்ரீயை உருவாக்க வேண்டிய தேவை ரின்னுக்கு ஏற்பட்டது. அப்போது ரின் தனது தந்தையைப் பற்றி தாய் சச்சியே தகாஹதாவிடம் விசாரித்திருக்கிறார். அவர் அப்பாவின் புகைப்படங்கள், அவர் இந்தியாவில் எங்கு வசித்தார்? அவரது முகவரி என்ன? ஆகிய தகவல்களை தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தனது தந்தையின் புகைப்படத்தையும் முகவரியையும் எடுத்துக் கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி அமிர்தசரசை வந்திருக்கிறார். அங்கு ஃபதேகர் சூரியன் ரோட்டில் தந்தை வசித்து வந்த பழைய முகவரி இருந்திருக்கிறது. ஆனால் அவரது தந்தையின் குடும்பம் அந்த முகவரியில் இல்லை. இதனால் தன் கையிலிருந்த முகவரி, மற்றும் தந்தையின் பழைய புகைப்படத்தைக் காட்டி அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். அதை வைத்து உள்ளூர் பிரமுகர்கள் இவருக்கு உதவியுள்ளனர். இதையடுத்து ஆகஸ்ட் 19, ‘ரக்ஷா பந்தன்’ அன்றுதான் ரின் தனது தந்தையும் ஒன்றுவிட்ட சகோதரி அவ்லீன் கவுரை சந்தித்திருக்கிறார். இதையடுத்து அவருக்கு ஒரு சர்ப்பைரஸ் காத்திருந்தது. அவரது தந்தையை அவர் கண்டுபிடித்துவிட்டார். ஆனால், ஒரு வயதில் பார்த்த மகனை மீண்டும் 21 வயதில் வளர்ந்து நின்ற மகனை அவரது தந்தையாம் அடையாளம் கண்டுபிடிக்க இயலவில்லை.

ரின் ஜப்பானிலிருந்து புறப்படும் போது ஒரு வயதாக தான் இருந்தபோது அவரது அம்மா, அப்பா சுக்பால் இவரை தூக்கி வைத்திருக்கும் குரூப் போட்டோவை அவர் கையில் கொண்டுவந்திருக்கிறார். அதைக் கொண்டு சுக்பால் தன் மகனை 20 ஆண்டுகள் கழித்து அடையாளம் கண்டுள்ளார். இது பற்றி ரின் தந்தை சுக்பால் சிங் கூறுகையில், “என் வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பம் வரும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று கண்கலங்கினார்.

 

சுக்பால். இந்தியா வந்த பின்னர் குர்விந்தர்ஜித் கவுர் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு பஞ்சாபின் அமிர்தசரசில் வாழ்ந்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு அவ்லீன் கவுர் என்ற மகள் உள்ளார். இவரது மனைவியும் மகளும் முழு மனதோடு ரின்னை தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டனர். தன் மகன் ரின்னை பொற்கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஜப்பான் மகனும் இந்தியத் தந்தையும் 20 ஆண்டுகள் கழித்துச் சந்தித்த உணர்ச்சிகரமான சம்பவம் குறித்து ஒரு காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. 2000 ஆண்டுகளில் சுக்பால், தாய்லாந்து விமான நிலையத்தில் முதல் மனைவியான சச்சியை சந்தித்துள்ளார்., 2002 ஆம் ஆண்டு ஜப்பானில் திருமணம் செய்து கொண்டுள்ளார். ரு வருடம் கழித்து ரின் பிறந்துள்ளார்.அவர் ஜப்பானிய மொழியைக் கற்று அங்கு வேலை செய்துள்ளா. ஆனால் இணக்கமாக வாழ முடியாததால் விவாகரத்து செய்துள்ளார். அதன்பின்னர் இவர் இந்தியா திரும்பியுள்ளார்.

 

 

மேலும் உங்களுக்காக...