செப்டம்பர் 5ஆம் தேதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் மாறி மாறி படத்தை பற்றி பல சேனல்களுக்கு பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். இப்போது சமூக வலைதளங்களில் வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தியின் பேட்டிதான் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. படத்தை பற்றி இருவருமே அலட்டிக் கொள்ளாமல் மிகவும் சாதாரணமாக கூலாக பேசி வருகிறார்கள்.
இதுவே படத்திற்கு ஒரு ப்ளஸாக இருக்கிறது. படத்தை பற்றி பெரிதாக பேசும் போதுதான் இன்னும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகிவிடுகிறது. ஆனால் அது வேண்டாம் என்பதில் கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உறுதியாக இருக்கிறார். படத்தின் ப்ரோமோஷனும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதுவும் மெட்ரோ முழுவதும் படத்தின் போஸ்டரை ஒட்டி பெரிய அளவில் ப்ரோமோஷனை செய்திருக்கிறார்கள்.
பெரிய நடிகரின் படங்களை பொறுத்தவரைக்கும் அந்த நடிகர் ப்ரோமோஷனுக்கு வரவேண்டும் என நிர்பந்தம் இல்லாத போது இந்த மாதிரியான ஒரு டெக்னிக்கை பயன்படுத்திதான் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும். அதை வெங்கட் பிரபுவும் சரி தயாரிப்பாளரும் சரி சரியாக செய்திருக்கிறார்கள்.
படத்தின் நான்கு பாடல்கள் வெளியான நிலையில் 4வது பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அதற்கு முன் வெளியான ஸ்பார்க் பாடல் வெளியாகி ‘என்னடா பண்ணி வச்சிருக்கீங்க எங்க விஜய் அண்ணாவை’ என கேட்கும் அளவுக்கு விஜய் ஆளே தெரியாமல் போயிருந்தார். டி ஏஜிங் முறையில் விஜயை மிகவும் இளமையாக காட்ட வேண்டும் என்பதற்காக வெங்கட் பிரபு அப்படி காட்டியிருந்தார்.
ஆனால் விஜய் இதைப் பற்றி ‘டேய் ரொம்பவும் மாத்திடாத. கொஞ்சம் ஒரிஜினலும் இருக்கிற மாதிரி பாத்துக்கோடானு’சொன்னாராம். ஆனால் ஒரு ஆர்வக்கோளாறில் வெங்கட் பிரபு ரொம்ப இளமையாக காட்டியதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதுதான் அந்த ஸ்பார்க் பாடலில் இருக்கும் விஜய். ஆனால் அந்த பாடலுக்கு பிறகு எல்லாருமே கடுமையாக விமர்சித்தார்கள் என்றும் வெங்கட் பிரபு கூறினார்.
அந்த விமர்சனத்தை நானும் ஏற்றுக் கொண்டேன். அதன் பிறகுதான் விஜய் அண்ணா சொன்னதுதான் சரி என நினைத்து மீண்டும் ரீ வொர்க் செய்தோம். அதனால்தான் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாக வேண்டிய டிரெய்லர் கொஞ்சம் தாமதமாக வெளியானது என வெங்கர் பிரபு கூறினார். ஸ்பார்க் பாடலில் இருக்கும் விஜய்க்கும் டிரெய்லரில் இருக்கும் விஜய்க்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கும். அது எல்லாமே ரீ வொர்க் செய்துதான் பண்ணியிருக்கிறார்களாம். அதனால் விஜயின் ஒரிஜினாலிட்டி மாறாத இளமையான விஜய் வருவார் என வெங்கட் பிரபு கூறினார்.