பேய்கள் குறித்த கதைகளை இங்கே பலரும் கட்டுக் கதைகள் என கூறுவார்கள். ஆனால் மற்ற சிலரோ அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் பல அனுபவங்களால் பேய் உண்மையிலேயே இந்த உலகத்தில் இருக்கிறது என பதறிப் போய் சொல்வார்கள். உதாரணத்திற்கு தங்களின் வீட்டில் ஏதாவது ஒரு அமானுஷ்ய சம்பவங்கள் நடந்தது என்று கூறினால் பலரும் அதனை நம்ப யோசிப்பார்கள்.
ஏனென்றால் ஒருவருக்கு மட்டுமே நடந்ததாக அவர் கூறும் போது அது பொய்யாக கூட இருக்கலாம் என பலரும் நம்ப மறுப்பார்கள். ஆனால், அதே வேளையில் ஒரே போன்றொரு அமானுஷ்ய சம்பவம் பலருக்கும் நடக்க நேர்ந்தால் நிச்சயம் அதனை நம்பித் தான் ஆக வேண்டும்.
அப்படி ஒரு பேய் இருப்பதாக நம்பப்படும் பொம்மை தொடர்பான செய்தி தான் இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது. நிறைய ஆங்கில திரைப்படங்களில் கூட பொம்மையில் பேய் இருப்பது போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதிலும் Annabelle பொம்மை என்ற பெயரை கேட்டாலே பலருக்கும் அள்ளு விடும்.
தற்போது பலரின் நிஜ வாழ்க்கையிலும் அப்படி ஒரு சம்பவம் தான் நிகழ்ந்துள்ளது. Bridal Doll என அழைக்கப்படும் மணப்பெண் பொம்மை ஒன்றை பற்றிய செய்தி தான் தற்போது பார்க்க போகிறோம். பிரிட்டன் பகுதியை சேர்ந்த அமானுஷ்ய நிபுணரான Lee Steer என்பவர், இந்த பொம்மை பற்றி சில விஷயங்களை தெரிந்து வைத்துள்ளார்.
இந்த பேய் பொம்மையை சுமார் 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்து வாங்கியுள்ள லீ ஸ்டீரையே அந்த பொம்மை முதுகில் கீறல்களை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. அருங்காட்சியகத்தில் இருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த பொம்மையில் இருக்கும் ஆவி குறித்து வெளியான தகவல்களின் படி, கணவரால் ஏமாற்றப்பட்ட எலிசபெத் என்ற பெண் தான் அதில் இருப்பதாகவும் தெரிகிறது. அதே போல, ஒரு ஆணால் அதிக பாதிப்பும் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால், ஒரு பெண் பொம்மையில் ஆவியாக இருக்கும் எலிசபெத், ஆண்களை மட்டுமே வெறுப்பதாகவும், பெண்களை எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அருங்காட்சியகத்தில் இருந்த அமானுஷ்ய பொம்மை மூலம் லீ ஸ்டீர் மட்டுமில்லாமல் அவரை போல 16 ஆண்கள் வரை காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஒருவர் மட்டுமே அந்த மணப்பெண் பொம்மை மூலம் பாதிக்கப்பட்டார் என்று கூறினால் அதை நம்புவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், லீ ஸ்டீரை போல சுமார் 17 ஆண்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளது நிச்சயம் பதற வைக்கும் சம்பவம் தான்.
பேய் என ஒன்று இல்லை என நம்பும் நபர்கள் கூட ஒரு நிமிடம் இந்த செய்தி மூலம் பயத்தில் மூழ்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.