ட்ரெயின்ல நீங்க புக் பண்ண சீட்ல வேற யாரும் உக்காந்துட்டு பிரச்சனை பண்றாங்களா.. அப்ப இத மட்டும் பண்ணா போதும்..

இன்று நாம் அருகே ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் பைக் அல்லது பேருந்து உள்ளிட்டவற்றை பயன்படுத்துவோம். ஆனால், கொஞ்சம் நீண்ட தூர பயணம் என்றால் ரயில், விமானம் உள்ளிட்டவற்றையும் நாம் போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தி…

train reservation issue

இன்று நாம் அருகே ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் பைக் அல்லது பேருந்து உள்ளிட்டவற்றை பயன்படுத்துவோம். ஆனால், கொஞ்சம் நீண்ட தூர பயணம் என்றால் ரயில், விமானம் உள்ளிட்டவற்றையும் நாம் போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தி வருகிறோம். இதில் பேருந்து, விமானம் உள்ளிட்டவற்றை விட ரயிலை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தான் நாள்தோறும் அதிகமாக உள்ளது.

மிகக் குறைந்த செலவில் நிறைய தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும் என்பதால் பேருந்தை விட பலரும் ரயில் பயணத்தை விரும்பி செய்து வருகின்றனர். அதே போல கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ரயிலில் இருப்பதால் பலரது ஃபேவரைட் போக்குவரத்தும் இது தான்.

அது மட்டுமில்லாமல், எத்தனை நேரம் பயணம் செய்தாலும் சலிப்பும், அசதியும் இல்லாத அளவுக்கு நல்லதொரு பயணமாகவும் அமையும். இப்படி பல சாதகமான விஷயங்கள் ரயில் பயணத்தில் இருந்தாலும் இன்னொரு பக்கம் சில பிரச்சனைகளும் இதில் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது.

முன்பதிவு செய்யாத பெட்டிகளில் எப்போதுமே கூட்டம் அலைமோதும் என்பதால் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்று வருவதற்காக பலரும் ஏசி, ஸ்லீப்பர் என முன்பதிவு செய்தும் ரயில் பயணம் மேற்கொள்வார்கள். அப்படியே நாம் முன்பதிவு செய்தும் ரயிலில் பயணம் செய்யும் போது சில ஆட்கள் நமது இருக்கையில் அமர்ந்து கொண்டு அதை அவர்களின் இருக்கை என பிரச்சனையை செய்யும் சம்பவங்களும் சமீப காலமாக நிறைய அரங்கேறி வருகிறது.

அது நம்முடைய இருக்கை என்பதை எப்படி விவரித்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லாமல் போவதால் பயணிகளுக்கு இடையே பிரச்சனைகளும் உருவாகிறது. இதன் காரணமாகவே பலருக்கும் ரயில் பயணம் எரிச்சலை வரவழைக்கும் நிகழ்வாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், வேறு ஒருவர் நமது இருக்கையில் அமர்ந்து கொண்டு ரயிலில் பிரச்சனை செய்தால் அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பது குறித்து சில ஆலோசனைகளை தற்போது பார்க்கலாம். ரயில்வே ஹெல்ப்லைன் 139 என்ற எண்ணிற்கு நமது சீட் நம்பர், பிஎன்ஆர் நம்பருடன் ‘எனது இருக்கையை வேறு ஒருவர் அபகரித்துக் கொண்டார்’ என குறிப்பிட்டு மெசேஜ் செய்ய வேண்டும்.

அப்படி செய்தால் பத்து நிமிடத்தில் டிடிஆர் பிரச்சனை செய்த பயணியை மாற்றி அனுப்பி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. பலரும் தாங்கள் முன்பதிவு செய்த இருக்கையிலே அமர முடியாமல் அவதிப்பட்டு வரும் சூழலில் இந்த தகவல் நிச்சயம் அவர்களுக்கு மிகப்பெரிய உதவியாகவும் இருக்கும்.