ஃபர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ஸ் போல.. வினாத்தாள் மாடலில் கல்யாண பத்திரிக்கை.. இணையவாசிகளை கவர்ந்த பதிவு..

Published:

முன்பெல்லாம் மக்கள் மத்தியில் ஒரு விஷயம் பரவலாக பேசப்பட வேண்டும் என்றால் அது தொடர்பான விஷயங்கள் செய்தித்தாள்களில் தான் அதிகம் வைரலாக மாற வேண்டும். அதன் பின்னர் தான் ஒரு நபர் குறித்த செய்தியே மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு அவர்கள் பற்றி கவனமும் கிடைக்கும்.

ஆனால் தற்போதெல்லாம் சமூக வலைத்தளத்தின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி காரணமாக ஒருவர் சாதாரணமாக ஒரு விஷயத்தை செய்தாலே, மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறி விடுகிறது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் தளம் என பல சமூக வலைத்தளங்களை கோடிக்கணக்கான மக்கள் இன்று பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், நாம் ஏதாவது வித்தியாசமாகவோ அல்லது பொழுதுபோக்கு அம்சங்களுடன் செய்தாலோ அடுத்த சில மணி நேரங்களிலேயே அவை பெரிய அளவில் கவனம் பெற்று அனைவரும் அது பற்றி பேசவே தொடங்கி விடுவார்கள். அப்படி ஒரு சூழலில் தான் ஆந்திர மாநிலத்தில் ஒரு திருமண பத்திரிக்கை குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

முன்பெல்லாம் திருமண பத்திரிக்கை என்றால் மணமக்கள் பெயர், திருமணம் நடைபெறும் தேதி, இடம், நேரம் ஆகிய விவரங்களும் இடம்பெற்றிருக்கும். ஆனால் தற்போதெல்லாம் அதே விவரங்களை சற்று புதுமையாகவோ தங்கள் பணிபுரியும் துறை சார்ந்து வித்தியாசமாக டிசைன் செய்தும் திருமண அழைப்பிதழ்களை தயார் செய்து வருகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பாக வாட்சப் செயலியில் மெசேஜ் அனுப்புவது போன்று சில திருமண பத்திரிக்கைகள் அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து விமான டிக்கெட் என புதுமையாக திருமண பத்திரிக்கைகளையும் தயார் செய்து இணையத்தில் ட்ரெண்ட் செய்து வந்தனர். அந்த வகையில் தான் தற்போதும் ஒரு திருமண பத்திரிக்கை பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருக்கும் வினாத்தாள் போலவும் அமைந்துள்ளது.

ஆந்திர பிரதேசம் மாநிலம் மர்தீறு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தான் பிரத்யுஷா. இவர் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வரும் சூழலில் அதற்கேற்ப தனது திருமண அழைப்பிதழையும் தயார் செய்துள்ளார். பிரத்யுஷியா மற்றும் பணீந்தரா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெறவிருக்கும் நிலையில் இது தொடர்பான விவரங்கள் வினாத்தாள் போன்ற வடிவில் திருமண அழைப்பிதழாக தயார் செய்யப்பட்டுள்ளது.

ஒரு மதிப்பெண் கேள்வி, சரியா தவறா கேள்விகள் என பலவும் இதில் இடம்பெற்றிருக்க ஒவ்வொரு விஷயமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் தங்களின் திருமண தேதி என்ன, நேரம் மற்றும் இடம் ஆகிய விவரங்களை கேள்வியைப் போன்று இடம்பெற்று அதற்கான பதிலை தெரிவிப்பது போன்றும் அவை அமைந்திருந்தது.

இப்படி அந்த பத்திரிக்கையில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்க அவை தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

மேலும் உங்களுக்காக...