டிமான்டி காலனி படம் ஹிட்டான பிறகு விஜய் சார் இப்படி பண்ணிட்டாரு… இயக்குனர் அஜய் ஞானமுத்து பகிர்வு…

By Meena

Published:

அஜய் ஞானமுத்து தமிழ் சினிமாவில் பணிபுரியும் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். அஜய் 2010 ஆம் ஆண்டு நாளைய இயக்குனர் சீசன் ஒன்றில் குறும்பட தயாரிப்பு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதில் இறுதி போட்டியாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அஜய் ஞானமுத்து.

பின்னர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்களிடம் உதவி இயக்குனராக சேர்ந்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். அஜய் ஞானமுத்து அவருடன் இணைந்து ஏழாம் அறிவு மற்றும் துப்பாக்கி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

2015 ஆம் ஆண்டு டிமான்டி காலனி என்ற ஹாரர் திரில்லர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் அஜய் ஞானமுத்து. இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. இதில் நடித்த அருள்நிதிக்கும் டிமான்டி காலனி திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு இமைக்கா நொடிகள், 2022 ஆம் ஆண்டு கோப்ரா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் அஜய் ஞானமுத்து.

டிமான்டி காலனி வெற்றி பெற்ற பின்னர் மக்கள் இந்த படத்தில் இரண்டாம் பாகம் வந்தால் நன்றாக இருக்குமே என்று பேசினார். அஜய் ஞானமுத்தும் டிமான்டி காலனி பாகம் 2 தயாராகி வருகிறது என்று சொல்லி இருந்தார். தற்போது இன்று ஆகஸ்ட் 15 டிமான்டி காலனி 2 படம் தியேட்டர்களில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் கடந்த வருடம் செப்டம்பர் மாதமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் தாமதமாகி இன்று வெளியாகி இருக்கிறது. அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படம் சஸ்பென்ஸ் திரில்லராக சூப்பர் நேச்சுரல் எலமெண்ட்ஸ் கொண்டு தயாரிக்கப்பட்டு பாசிட்டி ரிவியூகளை பெற்று வருகிறது.

டிமான்ட் காலனி 2 பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஜய் ஞானமுத்து, நடிகர் விஜய் பற்றி பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், டிமான்டி காலனி முதல் பாகம் படம் வெற்றி அடைந்த பிறகு விஜய் சார் எனக்கு போன் பண்ணார். போன் பண்ணிட்டு படம் ஹிட் ஆயிடுச்சு நான் படத்தை பார்க்கலாமா அப்படின்னு கேட்டார். சரிங்க சார் உடனே பார்க்கலாம் சொல்லி தியேட்டரை ரெடி பண்ணி அவரை வர சொன்னேன். குடும்பத்தோட வந்து டிமான்டி காலனி படத்தை பார்த்து ரசிச்சு என்னை பாராட்டிட்டு போனார் என்று பகிர்ந்துள்ளார் அஜய் ஞானமுத்து.